வென்டிலேட்டர் தட்டுப்பாடால் மூச்சு திணறும் அமெரிக்கா..!! ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 28, 2020, 2:34 PM IST
Highlights

குறைந்தபட்சம் இந்த வைரஸ் சுமார் 223 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கும்  எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் 
 சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , 

அமெரிக்காவில் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது ,  அதே நேரத்தில் சுமார் 1500 பேர் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்  என டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது .  சீனாவை அடுத்து இத்தாலி ஈரான் உள்ளிட்ட நாடுகளில் பெரும் மனித பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது .  இந்நிலையில்  வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா இத்தாலி போன்ற நாடுகளை  எல்லாம் பின்னுக்கு தள்ளி, கொரோனாவால் மிக மிக அதிகம்  பாதிக்கப்பட்ட நாடு என்ற இடத்தை பெற்றுள்ளது. 

இந்த வைரஸ் அமெரிக்காவில் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது .  ஆரம்பத்தில் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த இந்த வைரஸ் தற்போது அதன் கொடூர முகத்தை காட்ட தொடங்கி உள்ளது .  இதனால் அமெரிக்காவில் மக்கள் வரலாறு காணாத அளவிற்கு பாதிக்கப்பட்டும் உயிர் பயத்தில்  மூழ்கியுள்ளனர்.   கொரோனா  வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் படி அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது .  குறைந்தபட்சம் இந்த வைரஸ் சுமார் 223 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கும்  எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில்  சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,  

அமெரிக்காவில் வென்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனால் உடனடியாக ஒரு லட்சம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும்படி அமெரிக்கா அதிபர் அந்நாட்டின் தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் . ஒரு லட்சம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் 5 முதல் 6 நாட்கள் ஆகும் என்பதால் இந்நிலையில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய கூடுதல் பணியாளர்களை அமர்த்தியுள்ளனர்.  அமெரிக்காவில் வென்டிலேட்டர் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதை உற்பத்தி செய்வதில் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

 

 

click me!