அம்பேத்கரின் குறியீடா சமுத்திரகனி..? இயக்குநர் பா.ரஞ்சித் வைத்த ட்விஸ்ட்..!

Published : Apr 14, 2021, 05:32 PM ISTUpdated : Apr 14, 2021, 05:35 PM IST
அம்பேத்கரின் குறியீடா சமுத்திரகனி..? இயக்குநர் பா.ரஞ்சித் வைத்த ட்விஸ்ட்..!

சுருக்கம்

 குறிப்பாக சமுத்திரக்கனி அம்பேத்கர் போல கண்ணாடி அணிந்து மீசையின்றி தோன்றிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.ரஞ்சித், ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்.

அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார்.

இவர் படம் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் பாராட்டுகளை பெற்றன. இந்நிலையில் சமுத்திரக்கனி நடிப்பில் ரைட்டர் என்னும் படத்தை தயாரித்து வருகிறார் பா.ரஞ்சித்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எழுதியவற்றை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர்’’ என தெரிவித்துள்ளார். அம்பேத்கர் பிறந்த நாளில் இந்த ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக சமுத்திரக்கனி அம்பேத்கர் போல கண்ணாடி அணிந்து மீசையின்றி தோன்றிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!