மக்கள் நீதி மய்யத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.. குஷியில் கமல்..!

By vinoth kumar  |  First Published Feb 14, 2024, 7:15 AM IST

கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைகிறாரா? யார் முன்னிலையில் தெரியுமா?

இந்த சூழலில் தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டது. அதேபோல் இந்த முறையும் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: என்னது! 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை பதவியை கேட்டேனா? பிரேமலதா கொடுத்த பரபரப்பு விளக்கம்.!

இந்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

click me!