4 தொகுதி இடைத்தேர்தல்... கழற்றி விடும் கூட்டணிக் கட்சிகள்... கதி கலங்கும் அதிமுக!

By Thiraviaraj RMFirst Published Apr 25, 2019, 12:11 PM IST
Highlights

ஆட்சியை தக்க வைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுகவுக்கு  வரும் 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ஒத்துழையாமை நடத்தி வருவதால் அதிமுக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

ஆட்சியை தக்க வைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுகவுக்கு  வரும் 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ஒத்துழையாமை நடத்தி வருவதால் அதிமுக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

4 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் கைகோர்த்து தேர்தல் பணிகளில் களமிறங்கி விட்டன. அதேவேளை, 4 தொகுதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கிடந்தால் கிடக்கட்டும்... என தனது மகனின் வெற்றிக்காக பூஜை செய்ய வாரணாசி சென்று விட்டார் துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 4 தொகுதி வேட்பாளரை தேர்த்ந்தெடுத்ததில் இருந்த உட்கட்சி பூசலில் இருந்து இன்னும் மீளவில்லை. கூட்டணிக் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த வில்லை. 

தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கணிசமான தொகையை வாரி இறைத்தும் இப்போது ஒத்துழையாமையை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளை வழங்கி விட்டு தங்களுக்கு 4 தொகுதிகளை மட்டுமே வழங்கிய அதிருப்தியை இப்போது வெளிக்காட்ட ஆரம்பித்து இருக்கிறது தேமுதிக. 

அத்தோடு மக்களவை தேர்தலுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது  சட்டசபை தொகுதி இடைத் தேர்தலுக்கும், இதே கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. அது 18 தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமே. கையெழுத்து ஒப்பந்தமான பிறகே  திருப்பரங்குன்றம் உள்ளிட்ட  4 தொகுதிகளுக்குமான இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. 

ஆக 4 தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதை காரணம் காட்டி கூட்டணிக்கட்சிகள், பேரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.  கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக தேர்தலுக்கு முன்பே அமெரிக்கா கிளம்ப முடிவெடுத்து இருக்கிறார் பிரேமலதா. 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. ஆனால், அந்த தேர்தலில் போதிய ஒத்துழைப்பு கொடுக்க கூடாது என சில கூட்டணி கட்சிகள் நினைப்பதால், அதிமுக தலைமை அச்சத்தில், உள்ளது. 

click me!