அறிவாலயத்தில் அத்தனைக்கும் லஞ்சம்! நேர்மைக்கு பஞ்சம்: புகார் பெட்டியில் இளிக்கும் பூதத்தால் திணறித்தவிக்கும் ஸ்டாலின்.

 
Published : Feb 06, 2018, 05:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
அறிவாலயத்தில் அத்தனைக்கும் லஞ்சம்! நேர்மைக்கு பஞ்சம்: புகார் பெட்டியில் இளிக்கும் பூதத்தால் திணறித்தவிக்கும் ஸ்டாலின்.

சுருக்கம்

All bribes in the temple Famine for Integrity Stalin who grieves by the goblet in the complaint

விரக்தியின் உச்சத்தில் இருக்கிறாராம் மு.க. ஸ்டாலின்! காரணம்?...அறிவாலய ஊழியர்களில் மேல் நிலை நிர்வாகிகள் மேல் விவரிக்க முடியாத அளவுக்கு ’லஞ்ச புகார்கள்’ வந்து விழுவதுதான். சொந்த அலுவலகத்தில் இவ்வளவு ஓட்டையை வைத்துக் கொண்டு கோட்டையை நாம் எப்படி பிடிப்பது? என்று ஒன்றிய நிர்வாகி ஒருவர் கேட்டிருக்கும் கேள்வி அவரது மனசாட்சியை உலுக்கி எடுத்திருக்கிறது என்கிறார்கள்.

எடப்பாடி ஆட்சி மூன்று மாதங்களில் கலைந்துவிடும்! என்று சாபம் விட்டிருக்கும் ஸ்டாலின், அதுவரையில் தன் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் ‘கள ஆய்வு’ எனும் பெயரில் அத்தனை மாவட்ட கழக நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ‘தீர்வு காணும் பெட்டி’ எனும் பெயரில் ஒரு பெட்டியை வைத்து  அதில் குறைகளை எழுதிப் போடச் சொல்லியிருக்கிறார். அந்தப் பெட்டியில் புகார் மனுக்கள் வந்து குவிகின்றன. இந்த மனுக்கள் மிக கவனமாக கலெக்ட் செய்யப்படு ஸ்டாலினின் பர்ஷனல் அறையில் கொண்டு வைக்கப்படுகின்றன.

இச்சூழலில் சமீபத்தில் அந்த பெட்டி திறக்கப்பட்டு, மனுக்கள் பிரிக்கப்பட்டு ஸ்டாலினி பார்வைக்கு வைக்கப்பட்டன. அவற்றை வாசித்த செயல்தலைவர் விக்கித்துப் போனாராம். காரணம்?...வந்து விழுந்த புகார்களில் பெரும்பான்பவை அறிவாலயத்தை சேர்ந்த ஊழியர்களின் மேல் லஞ்சப் புகார்களைத்தான் கொட்டித் தீர்த்துள்ளனவாம்.

அந்தப் புகார் கடிதங்களில் உள்ள சாராம்சம் இதுதான்...”அறிவாலயத்தில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் கோரப்படுகிறது. கை செலவு, காஃபி செலவு! என்று கீழ் நிலை ஊழியர்களுக்கு ஐந்து, பத்து கொடுப்பதை பற்றி நாங்கள் பேசவில்லை. இது ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று கேட்டுப் பிடுங்கும் மேல்நிலை நிர்வாகிகள் பற்றியது.

எல்லாவற்றுக்கும் இங்கே ஒரு ரேட் இருக்குது. மாவட்ட செயலாளர்கள் உங்களை பார்த்து பயப்படுறதை விட இந்த மேல் நிலை நிர்வாகிகளைப் பார்த்துதான் அதிகம் பயப்படுறாங்க. காரணம், மாவட்ட செயலாளர்கள் மீது வர்ற புகார்களை உங்க கவனத்துக்கு போகாமல் தடுக்குற சக்தியை வெச்சிருக்கிறது இந்த நிர்வாகிகள்தானே.

மா.செக்கள், மாநில நிர்வாகிகளின் அத்துமீறல் பற்றி வரும் புகார்களை தடயம் தெரியாமல் அழிக்கிறதுக்கும், அதை அவங்களுக்கே திருப்பியனுப்புறதுக்கும் கொத்து கொத்தா பணம் வாங்குறாங்க.

வளைந்து கொடுக்காத மாவட்ட செயலாளர்கள் மேலே அந்த மாவட்டத்து நிர்வாகிகளை புகார் கடிதம் எழுதச் சொல்லி உங்க கவனத்துக்கு கொண்டு வர்ற வேலையையும் இவங்க பண்றாங்க. அதுக்கும் பணம் வாங்கிக்குறாங்க. இவ்வளவு ஏன் தளபதி, நாங்க எழுதுற புகார்கள் உங்க கைக்கு எந்த தடையுமில்லாம கிடைக்குறதுக்கே தனி ரேட்டு கொடுத்து கவனிக்க வேண்டியிருக்குது.

உறுப்பினர் படிவங்களை நிரப்பிட்டு அதை சமர்ப்பிச்சு, பதிவு பண்றதுக்கு  அறிவாலயத்துக்கு சமீபத்துல வந்தோம். கடும் கூட்டம். ஆனால் வரிசையில் நிற்காமல், சட்டுன்னு பதிவு செய்து முடிக்க ஒரு பைபாஸ் வழி ஒண்ணும் இருந்துச்சு. அதுக்கு தனி கட்டணம் செலுத்த சொன்னாங்க. அந்த ஒரு நாளில் மட்டும் எக்கச்சக்க வசூல்.

ஆக அறிவாலயத்துல அத்தனைக்கும் காசு, எடுத்ததுக்கெல்லாம் காசு. சில ஊழியர்களை தவிர மற்றவங்க மனசாட்சியை கழட்டி வெச்சுட்டுதான் நிர்வாகம் பண்றாங்க. மாஜி அமைச்சர்களும், கழக ஆட்சியில் வாரியத்தலைவர் போன்ற பதவியில இருந்து சம்பாதிச்சவங்களும் இவங்களுக்கு அள்ளிப்போட்டு, அள்ளிப்போட்டு வளர்த்துவிட்டுட்டாங்க.

அந்த மாஜிக்களுக்கு தினமும் சில ஆயிரங்கள் செலவாகுறது ஒரு விஷயமேயில்லை. ஆனா எங்களோட மாச வருமானமே சில ஆயிரங்கள்தான். பணம் இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக எங்களோட குமுறல் உங்க காதுக்கு எட்டலேன்னா கட்சியில் எப்படி அழுக்குகள் அகற்றப்படும் தளபதி? ஆக பணமிருக்கிற அந்த மாஜிக்கள் மட்டுமே எந்த பிரச்னையுமில்லாம பதவியில கோலோச்சுறாங்க.

அறிவாலயத்தில் நிறைய களைகள் இருக்குது அதை பிடுங்கி எறியுங்க. அறிவாலயத்தின் முக்கிய பதவிகளி இருக்கிற நிர்வாகிங்களோட சொத்துக்களை ஸ்கேன் செஞ்சு பார்த்தீங்கன்னா நீங்க மிரண்டுடுவீங்க! குறிப்பாக அந்த ‘ஜெய’த்தோட சொத்துக்களை மட்டும் தனியா ஸ்கேன் பண்ணிப் பாருங்க.” என்று நீள்கிறதாம்.
இதை வாசித்து தலைசுற்றிப்போன ஸ்டாலின், கூடிய சீக்கிரம் அறிவாலய ஊழியர்கள் மேல் தனி விசாரணையை துவக்குவார் என்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!