நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? தெரியாது.. ஒரு அமைச்சர்கள் கூட தேர்தலில் ஜெயிக்கக்கூடாது.. ஸ்டாலின்

By vinoth kumarFirst Published Dec 20, 2020, 1:24 PM IST
Highlights

மும்முனை தாக்குதல்களில் நாம் மாட்டிக் கொண்டாலும் நாம் 6வது முறையாக வெற்றிபெற வேண்டும். அர்ஜூனன் வைத்தகுறி தப்பாது என்பது போல திமுக வைத்த குறி  தப்பாது என நிரூபிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை, சண்டை சச்சரவுகளை தூக்கியெறிய வேண்டும். 

அர்ஜூனன் வைத்தகுறி தப்பாது என்பது போல திமுக வைத்த குறி  தப்பாது என நிரூபிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, சிலரை கட்டாயப்படுத்தி கட்சி துவங்க வைக்கப்படுகிறது. திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க பல முனைகளில் சதி நடக்கிறது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஆனால், அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள்.அர்ச்சுனன் குறி போல், திமுக குறி தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் உதயசூரியன்தான் வேட்பாளர், கருணாநிதிதான் வேட்பாளர் என மனதில் வைத்து கொள்ளுங்கள். தனிநபர்கள் வெற்றிபெற வேண்டும் என நினைக்காதீர்கள் திமுக வெற்றி பெற வேண்டும் என நினைக்கவேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் 5 முறை வெற்றி பெற்றதற்கு சமம். பாஜக ஆட்சியின் அதிகார பலம், அதிமுக ஆட்சியின் பண பலத்தை தாண்டி நாம் வெற்றி பெற வேண்டும். 117 இடங்களில் நாம் வென்றால் போதும், ஆனால், அதற்காக நாம் கட்சி நடத்தவில்லை. 1971 மற்றும் 1996 தேர்தல்களில் வென்றதை போன்ற வெற்றியை நாம் பெற வேண்டும். 2004, 2019 மக்களவைத் தேர்தலில் வென்றதை போன்ற வெற்றியை சாத்தியப்படுத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

 

மும்முனை தாக்குதல்களில் நாம் மாட்டிக் கொண்டாலும் நாம் 6வது முறையாக வெற்றிபெற வேண்டும். அர்ஜூனன் வைத்தகுறி தப்பாது என்பது போல திமுக வைத்த குறி  தப்பாது என நிரூபிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை, சண்டை சச்சரவுகளை தூக்கியெறிய வேண்டும். ஆளுங்கட்சியிடம் நிறைய பணம் உள்ளது. தங்களை காப்பாற்றி கொள்ள பணத்தை பயன்படுத்துவார்கள். பணத்தை வைத்து மட்டும் வெற்றி பெற முடியாது. பணத்தை கொடுத்தும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. பணமா? மக்கள் மனமா? என்ற நிலையில் மக்கள் மனதை மாற்றி வெல்ல வேண்டும். திமுக சார்பில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களை கட்சியினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

click me!