ஆட்டத்தை ஆரம்பித்த அழகிரி !! உருவாகிறது புதிய கட்சி !!

By Selvanayagam PFirst Published Sep 13, 2018, 9:31 PM IST
Highlights

திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் மு.க.அழகிரி விரைவில் புதிய கட்சியைத் தொடங்குகிறார். இடைத் தோதலை மனதில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2104 ஆம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த  திமுக தலைவரின் மூத்த மகனுமான அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து பல முறை கட்சியில் சேர அவர் முயற்சி செய்தும் முடியாமல்  போனது. இந்நிலையில்தான் கடந்த மாதம் 7 ஆம் தேதி கருணாநிதி உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக மரணமடைந்தார். அவர் இறந்த மூன்றாவது நாளே தொண்டர்கள் அனைவரும் தன் பக்கம் உள்ளனர் என அழகிரி கொளுத்திப்போட்டார்.

தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் மூலம் கட்சியில் சேர முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை. இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி பொதுக்குழுவின் ஆதரவுடன் ஸ்டாலின் திமுக தலைவரானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அழகிரி திமுகவுக்கு எதிராக கடந்த  5 ஆம் தேதி பேரணி ஒன்றை நடத்தினார். மேலும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட அழகிரி முயற்சி செய்து வருவதாக தகவல்  வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அழகிரி ஆதரவாளர் இசக்கிமுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

click me!