அமைதி பேரணியா? அழகிரி பேரணியா? எங்கும் அழகிரி மயமாக காட்சியளிக்கும் வாலாஜா சாலை!!!

By Maruthu Pandi SanthosamFirst Published Sep 5, 2018, 11:32 AM IST
Highlights

சென்னையில் மு.க.அழகிரி தலைமையில் பேரணி நடக்கவுள்ளதையொட்டி பேரணி நடக்கும் பகுதிகளான வாலாஜா சாலை, கடற்கரை சாலை, கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பும் பக்கமெல்லாம் அழகிரியின் முகங்களாக தென்படுகின்றது. 

காலை 10 மணிக்கு நடக்கவிருந்த அமைதி பேரணி சற்று தாமதமாக நடைபெற்று வருகின்றது.

முதல்வர் நிகழ்ச்சியும் அந்த சாலையில் நடக்கவிருந்ததால், பேரணி நடத்த அனுமதியில்லை என போலீசார், அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படியிருக்கும்போது, அழகிரி பேரணிக்கு எவ்வித சிக்கலும் வராமல் ,முதல்வர் நிகழ்ச்சியே 3 மணிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், ஸ்டாலினுக்கு எதிராகவும்,  அழகிரிக்கு ஆதரவான நிலையையும், அதிமுக எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்....

சென்னையில் மு.க.அழகிரி தலைமையில் பேரணி நடக்கவுள்ளதையொட்டி பேரணி நடக்கும் பகுதிகளான வாலாஜா சாலை, கடற்கரை சாலை, கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பும் பக்கமெல்லாம் அழகிரியின் முகங்களாக தென்படுகின்றது. 

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வருக்கான அமைதி அஞ்சலியானது அழகிரி அஞ்சலியாக மாற்றப்பட்டு வருகின்றது. திரும்பும் பக்கமெல்லாம் போஸ்டர்களும், அழகிரியின் உருவம் பதித்த மாஸ்க்குகளையும் மக்கள் அணிந்து சென்றுகொண்டிருக்கின்றனர்.

click me!