"அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்க" சமாதி நினைவேந்தலில் நிகழ்ந்த சலசலப்பு!

By Maruthu Pandi SanthosamFirst Published Aug 13, 2018, 10:43 PM IST
Highlights

அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அழகிரி அவர்கள், "கட்சியின் அடிப்படை உடன்பிறப்புகள் அனைவரும் என்னுடைய பக்கம் தான் உள்ளனர்" என தெரிவித்தார். 

மறைந்த முன்னாள் முதல் கலைஞர் அவர்களின் சமாதிக்கு அரசியல் காட்சிகள் சார்ந்த நபர்களும், மக்களும் தினந்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் பெய்ந்துவரும் மழையையும் பொருட்படுத்தாமல் தினந்தோறும் மக்கள் கூட்டம் சமாதிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்று காலை கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி அவர்கள் அவருடைய குடும்பத்தினருடன் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். 

அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அழகிரி அவர்கள், "கட்சியின் அடிப்படை உடன்பிறப்புகள் அனைவரும் என்னுடைய பக்கம் தான் உள்ளனர்" என தெரிவித்தார். இது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த சலசலப்பினை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து,
 
அதனை தொடர்ந்து, நினைவேந்தலுக்காக சேப்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக ஜெ. அன்பழகன் கலைஞர் சமாதிக்கு வந்தார். அந்த கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இருந்தனர். அனைவரும் கலைஞரின் சமாதி அருகே வந்து நினைவேந்தல் நிகழ்ச்சியை தொடர்ந்தனர். நினைவேந்தல் முடிந்த அடுத்த நிமிடம், கூட்டத்தில் இருந்து "செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்க" என்று உறுப்பினர்கள் கோசம் எழுப்ப ஆரம்பித்தனர். அப்பொழுது அந்த கூட்டத்தில் இருந்து  "அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்க" என்றும் கோசம் எழுந்ததை கவனிக்க முடிந்தது. அழகிரி அவர்களின் பேச்சை தொடர்ந்து இவ்வாறு நிகழ்திருப்பது ஸ்டாலின் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!