
அடுத்து அரசியலில் அஜித்..? அன்புமணி ராமதாஸ் போட்ட குண்டு...
தமிழ் சினிமா நடிகர்களில் அஜித் மட்டும் தான் சரியாக வரி செலுத்துவதாக தெரிகிறது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்
சினிமா பிரபலங்கள் அரசியலில் குதிப்பதை பற்றி விமர்சித்து பேசிய அன்புமணி ராமதாஸ்,வரியை கூட சரியாக கட்ட தவருபவரால் எப்படி தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
அப்போது அஜித்தை தவிர மற்ற எவரும் சரியாக வரி செலுத்துவதாக தெரியவில்லை என்றவுடனே,கூட்டத்தில் இருந்த பலரும் அஜித் என்ற வார்த்தைக்கே கைதட்டி வரவேற்றனர்.
அப்போது,அன்புமணி ராமதாஸ் “அஜித் போன்ற நபருக்கு கைதட்டி அரசியலில்வரவேற்றால் பரவாயில்ல...இல்லையேல்நாடு நாசமாக தான் போகும் என நேரடியாகவே தாக்கி பேசி உள்ளார்.
இதிலிருந்து அஜித் அரசியலுக்கு வந்தால் வரவேற்கலாம் என்றும்,மற்ற சினிமா பிரபலங்களை வரவேற்பது என்பது ஏற்றுகொள்ள முடியாதது என்பதையும் விளக்கி உள்ளது அன்புமணி ராமதாஸ் அவர்களின் பேச்சி.