திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் நடிகர் அஜித்... தரமான சம்பவம் பண்ணிய தமிழிசை!!

Published : Jan 21, 2019, 12:08 PM IST
திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் நடிகர் அஜித்... தரமான சம்பவம் பண்ணிய தமிழிசை!!

சுருக்கம்

திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்” என தமிழிசை கூறியுள்ளார்.  

திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை கலந்துகொண்டு பேசினார். 

இந்த விழாவில் அஜித் ரசிகர்களிடையே பேசிய தமிழிசை, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போட்டுச்சென்ற பணிகளை பாஜக மக்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்புற செய்து வருவதாகவும், கடந்த காலங்களில் திமுக ஆட்சி கலையக் கூடாது என்பதற்காக உதவியவர் வாஜ்பாய் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் பேசினார். அதன்பின், ஹரி அஜித் தலைமையில் தமிழிசையை சந்தித்த நூற்றுக் கணக்கான தல அஜித் ரசிகர்கள், தங்களை பிஜேபியில் இணைத்துக் கொள்வதாக கூறி தமிழிசைக்கு ஷாக் கொடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து,“திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இனி மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் தொண்டர்களாக வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளார். அஜித்தின் பெயரை சொன்னதுமே அரங்கத்தில் கைதட்டல்கள் காதை பிளக்கும் அளவிற்கு அதிர்ந்தது. வெகு நேரம் ஆகியும் கைதட்டல் நிற்கவே இல்லை.

அஜித்திற்கு இருக்கும் மாஸை தங்களது கட்சிக்கு பயன்படுத்த நினைக்கும் தமிழிசை அஜித் ரசிகர்களை பிஜேபிக்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் கமெண்ட்ஸ் அடித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!
அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!