ஏர்போர்ட் எடுபிடிகளா எம்.பி.க்கள்? மானாவாரியாக கொந்தளிக்கும் மைத்ரேயன்!

By vinoth kumarFirst Published Oct 16, 2018, 5:34 PM IST
Highlights

ஜெயலலிதா ஆண்டபோது தமிழகத்தில் எப்படி அவர் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொம்மைகளோ அதேபோல்தான் டெல்லியில் எம்.பி.க்களும். ஆனால் இப்போது எடப்பாடியார் காலத்திலும் தங்களின் நிலை அப்படியே தொடர்வதாக அவர்கள் கடுப்பாவதுதான் ஹைலைட்டு.

ஜெயலலிதா ஆண்டபோது தமிழகத்தில் எப்படி அவர் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொம்மைகளோ அதேபோல்தான் டெல்லியில் எம்.பி.க்களும். ஆனால் இப்போது எடப்பாடியார் காலத்திலும் தங்களின் நிலை அப்படியே தொடர்வதாக அவர்கள் கடுப்பாவதுதான் ஹைலைட்டு. சமீபத்தில் பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகம் இல்லத்தில் பெரும் மரியாதை, பிரதமர் அலுவலகத்தினுள் அன்பான வரவேற்பு என்று எடப்பாடியாருக்கு ஏக தடபுடல்கள். பிரதமரிடமும் சிரிக்கச் சிரிக்க பேசிவிட்டு வந்துவிட்டார்.

 

அவர் தமிழகம் திரும்பிய பின் மெதுவாக தங்கள் கடுப்புகளைக் கொட்ட துவங்கியுள்ளனர்  அ.தி.மு.க. எம்.பி.க்கள். குறிப்பாக பன்னீர் டீமின் முக்கிய கையான மைத்ரேயன் தான் ஏகத்துக்கும் எகிறி குதித்திருக்கிறார் எம்.பி.க்கள் வட்டாத்தில்...“அம்மா இருக்கும்போதுதான் நாம இப்படி இருந்தோம். அதுலேயாச்சும் ஒரு நியாயம் இருந்து, அது அம்மா. 

ஆனா இப்பவும் நம்மளை ஏர்போர்ட்டில் வரவேற்கவும், மீண்டும் வழியனுப்பவும் மட்டுமே பொம்மையா பயன்படுத்துறதா? பிரதமரை முதல்வர் எதற்காக சந்திச்சார்? அப்படின்னு வெளியுலகத்துக்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு. அதையேதான் நமக்கும் சொல்லியிருக்காங்க. அதைத்தாண்டி அரசியல் மற்றும் கழக ரீதியில் என்ன பேசப்பட்டுச்சு? அப்படிங்கிறதை நமக்கு சொல்லலாமில்லையா! நமக்கு அந்த உரிமை இருக்குதுதானே! சுப்ரீம்கோர்ட்டும், நாடாளுமன்றமும், தேர்தல் கமிஷனும் டெல்லியில்தானே இருக்குது, கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்குகள் இங்கேதானே நடக்குது. 

நாளைக்கே ஒரு சிக்கல் விக்கல்னா அதை பத்தி விசாரிக்கவும், சரி பண்ணவும் மட்டும் நம்மளை எடுபிடி வேலைகளுக்கு அலையவிடுறார்ல, அப்போ இதையும் சொல்லணுமில்லையா? நாம என்ன ஏர்ப்போர்ட்லேயும், அங்கேயும் மட்டும் தேவைப்படுற எடுபிடிகளா! அட தமிழக தலைமை செயலாளர் மூலமே எல்லாத்தையும் பிரதமர் அலுவலகத்துக்குள்ளே மூவ் பண்ணி முடிச்சுட்டார். தலைமை செயலரை நம்புற அளவுக்கு நம்மளை நம்புறதில்லை. நாளைக்கு அத்தனை எம்.பி. தொகுதியிலேயும் அவங்களை வெச்சே ஜெயிச்சு முடிச்டுடுவாரா?” என்று பொங்கியிருக்கிறார் பொங்கி.

 

மைத்ரேயனின் இந்த ஆதங்க பின்னணி என்ன? என்று விசாரித்தால் ‘டெல்லியில் பழனிசாமி என்னென்ன செய்தார்? பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய மனிதர்களிடம் என்னென்ன பேசினார்?’ என்று பன்னீர்செல்வம் கேட்டபோது மைத்ரேயனால் உருப்படியாக எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. இதனால் செம்மத்தியாக தாளிப்பு வாங்கிக் கட்டினாராம். அதன் விளைவுதானாம் இது. அய்யோ பாவம்ஸ் அ.தி.மு.க. எம்.பி.ஸ்!

click me!