தேர்தல் நேர்மையாக நடந்தால் அதிமுகதான் வெற்றி பெறும்.. ஆனால் அப்படி நடக்கவில்லை.. கதறும் ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2021, 1:20 PM IST
Highlights

தேர்தல் நேர்மையாக நடந்தால் பல இடங்களில் அதிமுகதான் வெற்றிபெறும், ஆனால் எப்படியாவது குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டும் என திமுக செய்யப்பட்டு வருகிறது, தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை, வாக்கு மையங்களில் வெப் கேமரா பொருத்தப்படவில்லை.

நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் அதிமுகதான் வெற்றிபெறும் என்றும், ஆனால் இந்த தேர்தல் முறைகேடாக நடைபெற்று வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சட்ட விரோத போக்கில் தேர்தல் நடத்தி வெற்றி பெறலாம் என நினைத்தால் அது போலியான வெற்றியாகத்தான் இருக்கும் என்று அவர் விமர்சித்துள்ளார். 9 மாவட்ட முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று காலை தொடங்கிய நிலையில், வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் பல இடங்களில் அதிமுக திமுகவுக்கு நேரடி போட்டி நிலவி வருகிறது. பாமக தனித்துப் தேர்தலை சந்திப்பதாலும், உள்ளூர் செல்வாக்கு உடையவர்கள் சுயேட்சையாக போட்டியிடுவதாலும் இந்த தேர்தலில் பன்முனை போட்டி நிலவுகிறது. 

இதையும் படியுங்கள்: ஜவ்வரிசியில் கலப்படம்.. ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தேர்தலைப் பொருத்தவரை நியாயமான நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கூறியிருக்கிறோம், வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தவேண்டும், பூத் ஸ்லிப் கொடுக்கவேண்டும் என கூறியிருந்தோம், ஆனால் இதில் எதுவும் சரியாக நடைபெறவில்லை. தேர்தல் நேர்மையாக நடந்தால் பல இடங்களில் அதிமுகதான் வெற்றிபெறும், ஆனால் எப்படியாவது குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டும் என திமுக செய்யப்பட்டு வருகிறது, தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை, வாக்கு மையங்களில் வெப் கேமரா பொருத்தப்படவில்லை.

இதையும் படியுங்கள்: அவர்களின் கனவில் மண்ணைப் போடாதீங்க.. முதல்வர் ஸ்டாலினை தாறுமாறாக எச்சரித்த மருத்துவர் ராமதாஸ்.

வாக்குச்சாவடிகள் குறைவாகவே உள்ள நிலையில் வெப்கோமரா பொறுத்துவதில் என்ன பிரச்சனை? திமுக என்றாலே ஏமாற்று பேர்வழி என மக்கள் உணர்ந்துள்ளன. தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் எந்த கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் கோவிலம்பாக்கம் பகுதியில் திமுக நிர்வாகி ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து, திமுக ஆட்சிக்கு வந்துள்ளது நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு திமுக தான் காரணம், அதனால்தான் அவர்கள் இப்போதெல்லாம் மக்களை சந்திக்கவில்லை, நேர்மையான முறையில் தேர்தல் நடந்தால் அதிமுகதான் வெற்றி பெறும், ஆனால் தேர்தல் முறைகேடாக நடைபெற்று வருகிறது, முறைகேடாக வெற்றி பெற நினைத்தால் அது போலியான வெற்றியாகத்தான் இருக்கும் என திமுகவை அவர் கடுமையாக விமர்சித்தார்.
 

click me!