சசிகலா வெளியே வந்தாலும் அதிமுக நான்காக உடையாது.. ப.சிதம்பரத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Jan 9, 2021, 10:11 AM IST
Highlights

திமுகவினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க பெற்ற இடைக்காலத் தடையை திமுக திரும்ப பெற தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். 

திமுகவினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க பெற்ற இடைக்காலத் தடையை திமுக திரும்ப பெற தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சசிகலா விடுதலையானால் அதிமுக நான்காக உடைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொங்கல் பரிசு வழங்கும் பணியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: இதுவரை 70 சதவீத பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இருமொழி கொள்கை என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. எந்த இடத்திலும் இந்தி திணிக்கப்படாது என மத்திய அரசு கொடுத்துள்ள உறுதிமொழியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். 

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததால் அதிமுக நான்காக உடையும் என சிலர் கூறி வருகின்றனர். அதிமுக உடைவே உடையாது. அது ஒரு எக்கு கோட்டை. யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. பொங்கல் பரிசிற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர், தேசன் கடைகளில் மு.க.ஸ்டாலினின் படத்தை வைத்து நன்றி என பேனர் வைத்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், திமுகவினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க பெற்ற இடைக்காலத் தடையை திமுக திரும்ப பெற தயாரா என அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். 

click me!