வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக முயற்சி..? அலறும் திமுக..!

Published : Apr 18, 2019, 03:55 PM IST
வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக முயற்சி..? அலறும் திமுக..!

சுருக்கம்

3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்து வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக திமுக சட்டத்துறை செயலாளர் புகாரளித்துள்ளார். 

3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளிலுள்ள சிசிடிவிக்களை செயலிழக்கச் செய்து வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாக திமுக சட்டத்துறை செயலாளர் புகாரளித்துள்ளார். 

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீவிடம் அளித்துள்ள புகாரில், ’3 மணிக்கு மேல் வாக்குச் சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்து வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டமிட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கில் காவல்துறை பாதுகாப்பை திரும்பப்பெற திட்டமிட்டுள்ளது.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. ஆளுங்கட்சிக்கு உதவும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலிருந்து திரும்ப பெறலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. நியாயம் மற்றும் வெளிப்படையான முறையில் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். 

தமிழகத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகளை அதிமுக கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது. ஆகையால் தேர்தல் ஆணியம் உடனடியாக அதனைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அந்தப்புகாரில் கிரிராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ரூ.200 கோடியை விட்டு; ரூ.2 லட்சம் கோடியை அள்ள வந்துருக்காரு.. விஜய் மீது கருணாஸ் அட்டாக்!
தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!