அதிமுகவை அதிர வைக்கும் போலி கையெழுத்து... இரட்டை இலையை குறி வைக்கும் திமுக..!

By vinoth kumarFirst Published Oct 1, 2019, 3:12 PM IST
Highlights

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் போட்டியிட்டார். அப்போது, உடல்நலக்குறைவால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் ஏ.கே.போஸிற்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டது. 

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றி பெற்றார். ஜெயலலிதா கைரேகை தொடர்பாக திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடந்து கொண்டிருந்தே போதே உடல்நலக்குறைவு காரணமாக எம்.எல்.ஏ போஸ் உயிரிழந்தார். இந்த வழக்கின் தீரப்பில் ஜெயலலிதா பதிவிட்ட கைரேகை போலியானது' என, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா கைரேகை வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், போலி கையெழுத்திட்ட படிவம் வழங்கிய, அ.தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும். நடவடிக்கை சட்டத்தை திருத்தி, கடிதம் வாயிலாக ஒப்புதல் அளித்த, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ சரவணன் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அக்கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட உள்ளது.

click me!