பாமக கூட்டணியால் கடும் அதிருப்தியில் அதிமுக சிட்டிங் எம்பிக்கள்..!

By vinoth kumarFirst Published Feb 24, 2019, 5:53 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமவுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என அதிமுக சிட்டிங் எம்பிக்கள் புலம்புகின்றனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமவுக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகிய இருவரும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என அதிமுக சிட்டிங் எம்பிக்கள் புலம்புகின்றனர்.

வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கட்சிகளுடன் ஒப்பந்தம் போடும்போது, தமிழகத்தில் நடைபெற உள்ள 21 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் அதிமுக-பாமக ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் தோட்டத்தில் முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்களுக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது. ஆனால் இந்த விருந்தில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் அதிமுகவில் தற்போது சிட்டிங் எம்பியாக உள்ளவர்கள் மற்றும் குறிப்பாக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.க்கள் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

என்ன காரணம் என்று விசாரித்த போது தமிழகத்தில் பாமகவுக்கு வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு இருந்து வருகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக வடமாவட்டங்களில் உள்ள எம்பி தொகுதிகள் தான்  வேண்டும் என்று ராமதாஸ் கேட்டு பெற்றுக் கொள்வார். ஆகையால் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது அதிமுகவில் மயிலாடுதுறை தொகுதி எம்பியாக பாரதிமோகன், கடலூர் தொகுதி எம்பியாக அருண்மொழிதேவன், அரக்கோணம் தொகுதி எம்பியாக திருத்தணி அரி, ஆரணி ஏழுமலை, சேலம் பன்னீர்செல்வம்,  ஸ்ரீபெரும்புதூர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் எம்பியாக உள்ளனர். இந்த 6 பேரும் வன்னியர்கள். இதில் கடலூர், அரக்கோணம், ஆரணி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 தொகுதிகள் தற்போது பாமகவுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதனால், தற்போதுள்ள 4 அதிமுக எம்பிக்களுக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பு இல்லை. இதனால் அதிமுக சிட்டிங் எம்பிக்கள் புலம்பி வருகின்றனர்.

click me!