#BREAKING அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை எப்படி இருக்கிறது? வெளியான பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 5, 2021, 1:30 PM IST
Highlights

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் தீவிர அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வில் இருந்துவந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்டிலேட்டர் உதவியுடன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இந்நிலையில், கொரோனாவில் மீண்டு ஓய்வில் இருந்து வந்த அதிமுக அவைத்ததலைவர் மதுசூதனனுக்கு கடந்த மாதம் 20ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் ஆபத்தான கட்டத்தில் இருந்து மெல்ல அவர் மீண்டதாக கூறப்பட்டது. அப்படி இருந்த போதிலும்  வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில்,  இன்று அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, ராஜேஷ் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது, அவருக்கு முதலில் ஆதரவு அளித்த மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!