AIADMK - PMK Alliance: அதிமுகவுடன் பாமக கூட்டணியா? உண்மையை போட்டுடைத்த அன்புமணி.!

By vinoth kumarFirst Published Feb 27, 2024, 6:35 AM IST
Highlights

ள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு பாமக கட்சி முழு ஆதரவு. ஆனால் வடலூரில் ரூ.100 கோடி செலவில் அமையவிற்கும் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

வடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் : வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு பாமக கட்சி முழு ஆதரவு. ஆனால் வடலூரில் ரூ.100 கோடி செலவில் அமையவிற்கும் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. வடலூருக்குப்பதில் சென்னையில் வள்ளலால் சர்வதேச மையத்தை  அமைத்தால் வள்ளலாரின் புகழ் உலக அளவிற்கு பரவும். வள்ளலாரின் கனவுப்படி வடலூரில் நிலம் அப்படியே இருக்க வேண்டும். வடலூர் பெருவெளியில் எந்தவொரு கட்டுமானங்களும் இல்லாமல் இருக்க வேண்டும். வள்ளலார் வாழ்ந்த மண்ணை தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் சிதைக்கக் கூடாது என  அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள்? இறுதிக்கட்டத்தில் பேச்சுவார்த்தை!

கூட்டணி குறித்து பாமக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு வாரத்தில் முடிவு செய்யப்படும். அதுவரை தயவு செய்து பொறுத்து கொள்ளுங்கள். கற்பனைக்காக செய்திகளை திரித்து வெளியிட வேண்டாம். உங்களுடைய அவசரத்திற்காக எங்களால் செயல்பட முடியாது என்றார். 

இதையும் படிங்க: சொன்னதை செய்து காட்டிய இபிஎஸ்.. அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது? எத்தனை தொகுதிகள் தெரியுமா?

அதிமுக - பாமக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தருமபுரி, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், ஆரணி  உள்ளிட்ட 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இதனை அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

click me!