தலைமைக்கு எதிராக கம்புசுற்றும் அதிமுக எம்.எல்.ஏ... தகுதி நீக்கம் செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி முடிவா..?

By vinoth kumarFirst Published Jan 7, 2020, 11:52 AM IST
Highlights

நாடு முழுவதும் குடியரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்து உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கடந்த 23-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில், ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். 

அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அவரை தகுதி நீக்கம் செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் குடியரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் மற்றும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்து உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கடந்த 23-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில், ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். 

அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் எம்எல்ஏ தமிமுன் அன்சாரிக்கும் திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால், அதிமுக குடியுரிமை சட்டத்தை ஆதரித்து வாக்களித்த நிலையில் அதிமுக வேட்பாளர் கட்சி விரோத நடவடிக்கையாக திமுக தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஓபிஎஸ், இபிஎஸ் அதிர்ச்சி அடைந்தனர்.

அதேபோல், சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்துவிட்டு திமுக, அமமுக வெளிநடப்பு செய்த போது அதிமுக ஆதரவு எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கருப்பு உடை அணிந்து வந்திருந்தார். சட்டப்பேரவைக் கூடியதும், தனது கையில் தேசியக்கொடியுடன் வெளிநடப்பு செய்த தமிமுன் அன்சாரி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினார். இந்நிலையில், இதே நிலை நீடித்தால் மற்ற 2 எம்எல்ஏ.க்களான கருணாஸ், தனியரசு இதே போன்ற முடிவினை எடுப்பார்கள் என்பதால் தமிமுன் அன்சாரியை தகுதி நீக்கம் செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் முடிவெடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளன. 

click me!