AIADMK: விவசாயிகளின் கண்ணீர் உங்களை நிம்மதியாக தூங்கவிடாது.. ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய அதிமுக தலைவர்கள்.!

By vinoth kumarFirst Published Dec 17, 2021, 1:43 PM IST
Highlights

திமுக சொன்னதை செய்யவில்லை. நிர்வாகம் ஒன்று நடப்பதாக தெரியவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார். விளம்பரத்திற்காக படம் எடுப்பதில் மட்டுமே ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.  

திமுக வாக்குறுதியை நம்பி தேசிய மற்றும் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்து மக்கள் ஏமாந்துவிட்டனர். விவசாயிகளின் கண்ணீர் உங்களை நிம்மதியாக தூங்கவிடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைப்பது, அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்ப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேனி பங்களாமேட்டில் ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு வீரப்பன்சத்திலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் செல்லூர் ராஜூ, தருமபுரி நகராட்சி அலுவலகம் அருகே கே.பி. அன்பழகன், தூத்துக்குடியில் கடம்பூர் ராஜூ, புதுக்கோட்டையில் சி.விஜயபாஸ்கர், திருப்பத்தூரில் கே.சி.வீரமணி, செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பா.வளர்மதி, ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் கொறடா ரவி, நாமக்கல் தங்கமணி, கோவை எஸ்.பி.வேலுமணி, நாகர்கோவிலில் தளவாய் சுந்தரம், ராயபுரத்தில் ஜெயக்குமார் உளளிட்டோர் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஓ.பன்னீர்செல்வம்;-

தேனி பங்களாமேட்டில் அதிமுக ஒருங்கிணபை்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய ஓபிஎஸ்;- திமுக அரசு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.  ஸ்டாலின் வரப்போறாரு, விடியல் தரப்போறாரு என்றார்கள்;விடியல் தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது, ஆனால் விடியாத அரசாக திமுக அரசு இருக்கிறது. அதிமுக ஆட்சியில் கொரோனா நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. திமுக அரசு நிவாரணப் பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு பிறகே முல்லை பெரியாறு அணையில் தற்போது 142 அடி வரை நீர் தேக்கப்பட்டு வருகிறது. இழந்த உரிமைகளை போராடி மீட்கக்கூடிய இயக்கம் அதிமுக தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

சி.வி.சண்முகம்;-

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய சி.வி.சண்முகம்;- திமுக சொன்னதை செய்யவில்லை. நிர்வாகம் ஒன்று நடப்பதாக தெரியவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார். விளம்பரத்திற்காக படம் எடுப்பதில் மட்டுமே ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார்.  

திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்டப முடியவில்லை. அரசுத்துறை அதிகாரிகளை திமுக அரசு மிரட்டுகிறது, அச்சுறுத்துகிறது. தற்கொலைக்கு தூண்டுகிறது. மக்கள் கேட்காமலே வழங்கிய அரசு அதிமுக அரசு. கேட்டாலும் எட்டி உதைக்கிற அரசு திமுக அரசு. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. காவல்துறை ஏவல்துறையாக மாறியுள்ளது. 7 மாத கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

கே.சி.கருப்பணன்;- 

திமுக அரசு மக்களை பற்றி ஒரு நிமிடம் கூட கவலைப்படுவதில்லை, அதிமுகவை அழிப்பதே அவர்களுக்கு நோக்கம். எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை மக்கள் பணிகளை செய்யவிடாமல் திமுக அரசு தடுக்கிறது என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் குற்றம்சாட்டியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி;-

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே இணை ஒருங்கிணபை்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடியார்;- சேலம் அதிமுகவின் கோட்டை. தேர்தலின் போது திமுக அளித்த 525 வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக வாக்குறுதியை நம்பி தேசிய மற்றும் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்து மக்கள் ஏமாந்துவிட்டனர். விவசாயிகளின் கண்ணீர் உங்களை நிம்மதியாக தூங்கவிடாது. விவசாயிகளுக்கு துரோகம் செய்த திமுக, அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கும். முதியோர் உதவித்தொகை உயர்வு, கல்விக்கடன் ரத்து, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட வாக்குறுதி என்னவானது என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் மூலம் முதியோரையும் ஏமாற்றிய ஒரே கட்சி திமுக தான். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு வீர்கெட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் 557 கொலைகள் நடந்துள்ளன. 

click me!