அதிமுகவுடன் கைகோர்க்கும் பாமக... திமுகவை அதிர வைக்கும் கூட்டணி கணக்கு..!

By vinoth kumarFirst Published Jan 2, 2019, 12:28 PM IST
Highlights

அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால், பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி ராம்தாஸ் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திவருகிறார். கடந்த வட மாவட்டங்களில் தோற்ற தொகுதிகளில் அதிமுகவின் ஓட்டு ஓரளவு சேர்ந்தால்கூட, பல தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்றும் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி அமைக்கும் பொறுப்பை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்துக்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் பாமக இறங்கியுள்ளது. 

அதற்கான வாய்ப்புகளை ராமதாஸும் அன்புமணியும் பரிசீலித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புவரை தினகரனின் அமமுகவுடன் கூட்டணி சேரலாம் என்று பா.ம.க தரப்பில் ஆலோசனை எழுந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் நடந்ததாகக் கூறப்பட்டது. தற்போது பாமக தொடங்கி 30-ம் ஆண்டில் நடைபோட்டுவருகிறது. 30 ஆண்டுகள் வயதுடைய கட்சியை சென்ற ஆண்டு தொடங்கிய தினகரனின் கட்சியை நம்பி கூட்டணிக்கு செல்வதா என ராமதாஸ் விரும்பவில்லை. 

இதனால், தினகரனுடன் சேரும் முயற்சியைத் தற்காலிகமாக பாமக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அதன்பிறகுதான் தங்களது பழைய கூட்டளிகளான திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி குறித்த ஆலோசனைகள் பாமகவில் சூடுபிடித்தன. இதுகுறித்து பா.ம.க வட்டாரங்களில் விசாரித்தோம்.  “தற்போது பாஜக தரப்பிலிருந்து கூட்டணி தூது வந்துள்ளது. ஆனால், இந்த முறை தி.மு.க அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தால் நல்லது என்று கருத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் உள்ளது. மேலும் ராமதாஸின் சம்பந்தியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கிருஷ்ணசாமி மூலம் காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசியிருக்கிறார்கள். 

தி.மு.க.விடன் கூடுதலாக தொகுதிகளை வாங்கி, அதிலிருந்து பா.ம.கவுக்கு சில தொகுதிகளைப் பெறலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது.  ஆனால், வைத்தால் தி.மு.க.வுடன் நேரடியாக கூட்டணி வைக்கலாம். ‘கூட்டணிக்குள் கூட்டணி’கதையெல்லாம் வேண்டாம் என்று ராமதாஸ் கறாராக மறுத்துவிட்டார். இதுவரை திமுக தரப்பிலிருந்தும் கூட்டணி குறித்த சிக்னல்கள் பாமகவுக்கு வரவில்லை. இதனால், திமுகவுடனான கூட்டணி வாய்ப்புகள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் கூட்டணியை அறிவித்துவிட வேண்டும் என்று ராமதாஸ் உறுதியாக இருக்கிறார்.

 

கூட்டணி என்று அறிவித்த பிறகு தற்போது அ.தி.மு.க தரப்பிலிருந்து சிக்னல் கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தால், பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி ராம்தாஸ் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திவருகிறார். கடந்த வட மாவட்டங்களில் தோற்ற தொகுதிகளில் அதிமுகவின் ஓட்டு ஓரளவு சேர்ந்தால்கூட, பல தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்றும் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

மேலும் கொங்கு மண்டலத்தில் பலமாக உள்ள தொகுதிகளையும் அதிக இடம் கேட்டு பெற முடியும். இதனால் அதிமுக கூட்டணிக்கு செல்வது பாமகவுக்கு நல்லது என  நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள். இறுதி முடிவை ராமதாஸும் அன்புமணியும் எடுப்பார்கள்” என்கின்றன பாமக வட்டாரங்கள். இதற்கிடையே, ஆளும் கட்சித் தரப்பிலிருந்து கொங்கு மண்டத்தைச் சேர்ந்த அமைச்சரும் முக்கிய பிரமுகர் ஒருவரும் பா.ம.க-வுடன் கூட்டணிக்குப் பேசி இருப்பதாகவும் அதிமுகவின் நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

click me!