அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் அதிரடி மாற்றம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jun 18, 2021, 11:29 AM IST
Highlights

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சென்னை, கோவை மண்டலங்கள் நிர்வாக வசதிக்காக திருத்தி அமைக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சென்னை, கோவை மண்டலங்கள் நிர்வாக வசதிக்காக திருத்தி அமைக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் அஸ்பயர்கே.சுவாமிநாதன், தான் வகித்துவரும் பொறுப்பில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தன்னைவிடுவிக்குமாறு வைத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.

தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு ஏற்கெனவே செயல்பட்டு வரும் சென்னை, கோவை மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்கள் இன்று முதல் பின்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டு செயல்படும்.

சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்கள்: வட சென்னை வடக்கு (கிழக்கு மற்றும் மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு மற்றும் மேற்கு), தென் சென்னை வடக்கு (கிழக்கு மற்றும் மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு மற்றும் மேற்கு),சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு, திருவள்ளூர் (வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு) என திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்கள்: கோவை மாநகர், கோவை புறநகர் வடக்குமற்றும் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு, கடலூர் கிழக்கு, மத்தியம் மற்றும் மேற்கு என்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் பொறுப்பில் அதிமுக செய்தித் தொடர்பாளர் எம்.கோவை சத்யன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

click me!