
பாஜக என்ன சொல்கிறதோ அதை மண்டியிட்டு கேட்கும் அரசாக அதிமுக அரசு உள்ளது என்றும் நீட் தேர்வை அதிமுக அரசால் ஏன் தடுக்க முடியவில்லை என்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்குப் பிறகு, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
பாஜக என்ன சொல்கிறதோ அதை மண்டியிட்டு கேட்கும் அரசாக அதிமுக உள்ளது. நீட் தேர்வை அதிமுக அரசால் ஏன் தடுக்கமுடியவில்லை.
சட்டப்பேரவையைக் கூட்டி அதிமுக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.ஆர். ராமசாமி கூறினார்.
பின்னர் பேசிய எம்.எல்.ஏ. விஜயதரணி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறினார்.