தேர்தலை கண்டு அதிமுக அஞ்சவில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு பளீச்!

By vinoth kumarFirst Published Sep 25, 2018, 3:36 PM IST
Highlights

தேர்தலை நடத்துவதற்கு அஞ்சும் கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இல்லை என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு அஞ்சும் கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இல்லை என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது பற்றியும், அது குறித்த சாதனைகள் பற்றி எடுத்து சொல்வதற்கான கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

 

இந்த ஆண்டு பயிர்க்கடன் 8 ஆயிரம் கோடி ரூபாய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன்கள் எத்தனை பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டத்தில் குறியீடுகள் எட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாதத்துக்கு எவ்வளவு குறியீடு. எத்தனை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

அந்த குறியீடு எட்டப்பட்டிருக்கிறதா என்பதை கூட்டுறவுத் துறை பதிவாளரும், கூடுதல் பதிவாளர்களும் ஆய்வு செய்வார்கள் தமிழக அரசை பொறுத்தவரை எந்த தேர்தலை நடத்துவதற்கும் அஞ்சவில்லை. 2008 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களாலேயே நடத்தமுடியவில்லை. அவர்களே அறிவித்து திடீர் என்று ரத்து செய்தார்கள். சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணம் என்று கூறி ரத்து செய்தார்கள். இதனை எண்ணிப் பார்க்க வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு அஞசும் கட்சி அதிமுக இல்லை.

 

இது குக்கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை அனைத்து பகுதியிலும் 18,465  சங்கங்கள் உள்ளது. முதல் கட்ட பணி முடிந்து இரண்டாம் கட்ட வருகிற 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஆனால், தேர்தலை கண்டு அதிமுக அஞ்சவில்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகிறேன் என்று செல்லூர் ராஜூ பேசினார்.

click me!