அதிமுக ஒரு கட்சியே கிடையாது.. கம்பெனி.. அதை பற்றி பேசி நேரத்தை வீணடிக்காதீங்க.. தெறிக்கவிடும் டிடிவி.தினகரன்.!

Published : Jun 15, 2022, 01:08 PM IST
அதிமுக ஒரு கட்சியே கிடையாது.. கம்பெனி.. அதை பற்றி பேசி நேரத்தை வீணடிக்காதீங்க.. தெறிக்கவிடும் டிடிவி.தினகரன்.!

சுருக்கம்

திமுக ஆளும் கட்சி. அதை எதிர்க்கும் அனைத்துமே எதிர்க்கட்சிகள் தான். பாஜக எதிர்கட்சி கிடையாது.  மடியில் கனம் இருப்பதால், ஒரு எதிர்கட்சியாக அதிமுக முறையாக செயல்படவில்லை. அமமுக மக்களுக்காகப் பாடுபடுகின்ற கட்சி. 

மடியால் கணம் இருப்பதால் எதிர்கட்சியாக அதிமுக செயல்படவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  நாகை மாவட்ட அவைத்தலைவர் ஆறுமுகம் அண்மையில் காலமானார். இந்நிலையில், நாகை மாவட்ட வேதாரணயத்தை அடுத்த காரியப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆறுமுகதத்தின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;-அதிமுக ஒரு கட்சியாக நடக்கவில்லை கம்பெனியாக நடக்கிறது. வியாபார கம்பெனியான அதிமுகவில், அதிக முதலீடு செய்தவர்களுக்குதான் பொறுப்பு என்றும் கடுமையாக விமர்சித்தார். 

திமுக ஆளும் கட்சி. அதை எதிர்க்கும் அனைத்துமே எதிர்க்கட்சிகள் தான். பாஜக எதிர்கட்சி கிடையாது.  மடியில் கனம் இருப்பதால், ஒரு எதிர்கட்சியாக அதிமுக முறையாக செயல்படவில்லை. அமமுக மக்களுக்காகப் பாடுபடுகின்ற கட்சி. தேர்தல் வெற்றி தோல்விகளை கணக்கில்  கொள்ளாமல் மக்கள் சேவை தொடரும் என தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!