அதிமுக பல துரோகிகளை சந்தித்து விட்டது.. பொடி வைத்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ..!!

Published : Oct 05, 2020, 08:32 AM IST
அதிமுக பல துரோகிகளை சந்தித்து விட்டது.. பொடி வைத்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ..!!

சுருக்கம்

அதிமுக பல துரோகிகளை சந்தித்துள்ளது என்று அமைச்சர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொடி வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக பல துரோகிகளை சந்தித்துள்ளது என்று அமைச்சர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பொடி வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ” எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலும் கட்சியில் துரோகம் இருந்தது. பல துரோகிகளை அதிமுக சந்தித்துள்ளது. பதவி பெற்று உயர்ந்தவர்கள் துரோகம் செய்து விட்டு, ஓடிய போதும் கட்சியை தொண்டர்கள் காத்தனர். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. திமுக டெல்லிக்கு செல்கிறது என்றால் கட்சிக்கும், பதவிக்கும் மட்டுமே;ஆனால் முதல்வரும், துணைமுதல்வரும் மக்களுக்காக, தமிழக பிரச்சினைக்களுக்காக செல்கின்றனர்.கோஷ்டிபூசலை சொல்லி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஜனநாயக இயக்கம் என்றால் கோஷ்டிபூசல் இருக்கத்தான் செய்யும். அதிமுக தலைமைக்கழகம் என்பது தொண்டர்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய சொத்து’’ என்றார். 
 
PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!