ஜி.கே.வாசனுக்காக பாஜகவிடம் பணிந்த அதிமுக... ஏ.சி.சண்முகத்துக்கும் வாய்ப்பு கேட்டு குடைச்சல்..!

By Thiraviaraj RMFirst Published Mar 9, 2020, 1:09 PM IST
Highlights

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக தம்பிதுரை, கே.பி.முனுசாமியும் போட்டியிடும் நிலையில் ஜி.கே.வாசன் வாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக தம்பிதுரை, கே.பி.முனுசாமியும் போட்டியிடும் நிலையில் ஜி.கே.வாசன் வாசனுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 

தமாகா கட்சியைவிட  அதிகமாக தொண்டர்களை வைத்திருக்கும் கட்சி தேமுதிக. ஆகையால், தனது சகோதரர் சுதீஷுக்கு மாநிலங்களவை எம்.பி சீட் கேட்டு பிரேமலதா அடம்பிடித்து வந்தார். இதற்காக பாஜக தலைவர்களிடமும் ஆதரவு கேட்டு வந்தார். ஆனால், அவரது தம்பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த முன்னாள் பிரணாப் முகர்ஜியும், ஜி.கே. மூப்பனாரும் நெருங்கிய நண்பர்கள். அந்த வகையில் அவர் மூலமும், முரளிதர ராவ் உள்ளிட்ட டெல்லி லாபிகள் மூலம் ஜி.கே.வாசனுக்கு எம்.பி சீட் கொடுக்க அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி அதிமுகவும் சீட் கொடுக்க சம்மதித்துள்ளது. அதேபோல் இரண்டு முறை மக்களவை தேர்தலில் தோற்றுப்போன ஏ.சி.சண்முகத்துக்கும் சீட் கொடுக்க வேண்டும் என பாஜக அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி இருக்கிறது.

அதற்கு அதிமுக தரப்போ, ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுத்ததே பெரிய விஷயம். ஏ.சி.சண்முகத்துக்கும் கொடுத்து விட்டால், கூட்டணியில் உள்ள தேமுதிக இதனை பெரிய பிரச்னையாக்கி விடும். அவர்களுக்கும் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். பிறகு எங்கள் கட்சியில் உள்ள ஒருவருக்கும் சீட் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும். அப்படி ஒரு நிலைவந்தால் அதிமுகவில் பெரும் அதிருப்தி ஏற்படும். ஆகையால் ஜி.கே.வாசனோடு நிறுத்திக் கொள்ளுங்கள்  என தங்களது நிலைமையை பாஜகவுக்கு சுட்டிக் காட்டியுள்ளது. 

அதன்பிறகே ஏ.சி.சண்முகத்துக்கு வாய்ப்பு கொடுக்கச்சொல்லி அழுத்தம் கொடுக்காமல் விலகி இருக்கிறது பாஜக. ஆக மொத்தத்தில் இந்த விவகாரத்தில் ஏ.சி.சண்முகமும், விஜயகாந்த் குடும்பமும் பெறுத்த ஏமாற்றத்தில் இருக்கிறது.   

click me!