அதிமுகவுக்கு வாழ்த்து சொன்ன டி.டி.வி!! இரட்டை இலையை கைப்பற்றியே தீருவேன் என சூளுரை!

By vinoth kumarFirst Published Oct 16, 2018, 2:38 PM IST
Highlights

பகீரதபிரயத்னப்பட்டும் டி.டி.வி.தினகரனால் அ.தி.மு.க. தலைமை அதிகாரத்தை அடையமுடியவில்லை. விளைவு, ’இது தானா சேர்ந்த கூட்டம்’ என்று தன் பின்னாடி வந்த கூட்டத்தை அழைத்துக் கொண்டு போய் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ எனும் கட்சியை துவக்கினார்.

பகீரதபிரயத்னப்பட்டும் டி.டி.வி.தினகரனால் அ.தி.மு.க. தலைமை அதிகாரத்தை அடையமுடியவில்லை. விளைவு, ’இது தானா சேர்ந்த கூட்டம்’ என்று தன் பின்னாடி வந்த கூட்டத்தை அழைத்துக் கொண்டு போய் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ எனும் கட்சியை துவக்கினார். சமீப காலமாக தமிழக அரசியல் கண்டு வரும் பல லெட்டர் பேடு கட்சிகளில் இதுவும் ஒன்றாக மாறும்! என்றுதான் அ.தி.மு.க.வின் அமைச்ச கோடிகள் நினைத்தனர்.

 

ஆனால் அவர்களே கடுப்பில் கழுவிக் கழுவி ஊற்றும் வண்ணம் செம்ம வைபரெண்டாகத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறது அக்கட்சி. இந்நிலையில், என்னதான் தனிக்குடித்தனம் போய்விட்டாலும் கூட தினகரனுக்கு இன்னமும் நினைவெல்லாம் அ.தி.மு.க.வாகத்தான் இருக்கிறது. தன் கட்சியை வளர்த்து அதை அரசாளும் நிலைமைக்கு கொண்டு வருவதை விட்டு, அ.தி.மு.க. திராட்சை தோட்டத்தின் வெளியே நின்றபடி அக்கட்சியையும், அதன் இரட்டை இலை சின்னத்தையும் பார்த்து செம்மத்தியாக ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்கிறார் மனிதர். 

இன்னமும் இந்த நரி திராட்சை மேலே கண்ணு வெச்சுதான் திரியுதுபா’ என்று அரசியல் விமர்சகர்கள் லந்து விடும் வகையில்தான் இருக்கிறது அவரது இன்றைய அறிக்கை ஒன்று. அதாவது, நாளை அக்டோபர் 17! அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தோற்ற நாள். இதை அ.தி.மு.க.வினர் கேக்வெட்டியோ, பிரியாணி போட்டோ கொண்டாடுவதும், பெருமை பேசிக் கொள்வதும் சாதாரணம். ஆனால் சம்பந்தமேயில்லாமல் தினகரன், இந்த விழாவை ஒட்டி வரிஞ்சு வரிச்சு ஒரு மடல் எழுதியிருக்கிறார். 

அக்கட்சியின் அருமை பெருமைகளையும், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரும் கழகத்துக்காக செய்த தியாகங்களையும் ரெண்டு பக்கங்களுக்கு புகழ்ந்து தள்ளியுள்ளார். கடைசி பக்கத்தில் அ.தி.மு.க.வின் அதிகாரத்தில்  தற்போது இருப்பவர்களை வெச்சு செய்து விளாசி தள்ளியிருக்கிறார். கட்ட கடைசி பாராவில், ‘அம்மா வழியில் கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் இக்கொடியவர்களின் பிடியில் இருந்து சட்டப்பூர்வமாக மீட்போம். 

அந்த நல்ல நாள் வெகுதொலைவில் இல்லை. நாம் ஒவ்வொருவரும் கழகம் மீட்கும் ஜனநாயக போராளியாக மாறுவோம்.’ என்று  பொங்கி வழிந்திருக்கிறார். இதை வைத்துத்தான் நரி இன்னமும் திராட்சைக்கு வெயிட்டிங்! என்று அல்லையில் கிண்டலடித்து தெறிக்க விடுகின்றனர் விமர்சகர்கள். ஹும்! பிடிக்காதவனோட பர்த்டேக்கு க்ரீட்டிங் கார்டு வரைஞ்சு, அதுல அவனை திட்டியும் தீர்க்குற காரியத்தை பண்ணுற ஒரே தலைவர் இந்த உலகத்துலேயே தினகரன் மட்டுந்தேம்!

click me!