அதிமுக: காலை 10மணிக்கு நல்ல செய்தி வரும்.. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தகவல்..!

By T BalamurukanFirst Published Oct 7, 2020, 8:34 AM IST
Highlights

காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
 

காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படுவாரா..? என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் அதிகாலை 3 மணி வரை ஓபிஎஸ் உடனான ஆலோசனை நீடித்துள்ளது. முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்படுவாரா? வழிகாட்டு குழு அமைக்கப்படுமா? என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில் காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும்; மீண்டும் அதிமுக ஆட்சி வருவதற்கான ஆக்கப்பூர்வ பணி நடக்கிறது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் அதிகாலையில் செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.

முன்னதாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற குழப்பத்திற்கு தீர்வு அளிக்கும் வகையில் தனித்தனியே ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தினர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.அதேபோல் முதல்வர் பழனிசாமியுடன் , அமைச்சர்கள் அன்பழகன், சி.வி.சண்முகம், காமராஜ் ஆகியோரும் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

click me!