’எடப்பாடி காலில் விழுந்தது மறந்து போச்சா..?’எல்.கே.சுதீஷ் மீது கடும் ஆத்திரத்தில் அதிமுக நிர்வாகிகள்..!

By Thiraviaraj RMFirst Published May 18, 2019, 12:49 PM IST
Highlights

அண்ணே.. எங்களுக்கு அண்ணன் இல்லை. உங்களைத்தான் எங்கள் அண்ணனாக நினைக்கிறோம். ஏற்கெனவே இரண்டு முறை தோற்று விட்டான். இந்த முறை நாடாளுமன்றத்துக்குள் சுதீஷ் காலடி எடுத்து வைக்க நீங்கள் தான் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். 


விஜயகாந்த் உடல்நலம் குன்றிய நிலையில் பிரேமலதா கட்சியை வழிநடத்தி வருகிறார். ஆனாலும் தனது தம்பி சுதீஷ்தான் தனது அக்காவுக்கு அரசியலில் ஆல்இன்ஆல்.

 
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிரேமலதா தனது சகோதரனை மட்டுமே தலைவர்களை சந்தித்து பேச அனுப்பி வைப்பார். இன்னும் சொல்லப்போனால், மகன்களை விட அரசியலில் தம்பிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் பிரேமலதா. அப்படிப்பட்ட தம்பி தேர்தல் பிரச்சாரம் செய்து கறுத்து களைத்து போனதால் துடிதுடித்த பிரேமலதா மக்களவை தேர்தல் முடிந்த சூட்டோடு தம்பியை வெளிநாட்டிற்கு டூர் அனுப்பி விட்டார்.  

20 நாள் வெளிநாடு டூர் போய் திரும்பி இருக்கிறார் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ். அதிமுக கூட்டணியில், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். விழுப்புரம், சேலம் என இரு மாவட்டங்களில் பரவிக் கிடந்த இந்த தொகுதியில், ஏப்ரல் மாத வெயிலில் சுற்றி பிரசாரம் செய்ததால், ஆளே கறுத்து போய் விட்டார். ஓட்டுப்பதிவு முடிந்த உடன், சில கோவில்களுக்கு சென்று வந்தவர் அடுத்து குடும்பத்துடன், 20 நாள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா போய் விட்டு, சமீபத்தில் தான் ஊர் திரும்பி இருக்கிறார். இந்த விவகாரம் அதிமுக தரப்புக்கு தெரியவர, தேர்தலுக்கு முன் சீட்டுக்கும், நோட்டுக்கும் எப்படியெல்லாம் சுதீஷ் வந்து கெஞ்சினார். எடப்பாடியாரின் காலில் விழுந்து ‘அண்ணே.. எங்களுக்கு அண்ணன் இல்லை. உங்களைத்தான் எங்கள் அண்ணனாக நினைக்கிறோம். ஏற்கெனவே இரண்டு முறை தோற்று விட்டான். இந்த முறை நாடாளுமன்றத்துக்குள் சுதீஷ் காலடி எடுத்து வைக்க நீங்கள் தான் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். உங்களை மலைபோல் நம்பி இருக்கிறோம்’’என இருவர் ஆசிர்வாதம் வாங்கினர்.

அதெல்லாம் தேர்தல் முடிந்ததோடு மறந்து விட்டனர். தேர்தல் முடிந்த உடன் தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். செய்த உதவிகளையெல்லாம் மறந்து விட்டு 4 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் தம்பியை டூருக்கு அனுப்பி விட்டார்.  இன்னும் ரிசல்டே வரவில்லை. அதற்குள் கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் இப்படி நடந்து கொண்டால் வெற்றி பெற்ற பின்னர் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ’’ எனப் புலம்புகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.   

click me!