அதிமுகவில் முக்கிய நிர்வாகி அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்..!

Published : Jun 01, 2022, 08:12 AM IST
அதிமுகவில் முக்கிய நிர்வாகி அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்..!

சுருக்கம்

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி அதிரடியாக நீக்கப்பட்டுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். 

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி அதிரடியாக நீக்கப்பட்டுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

G. ராஜேந்திரன் (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?