ஓசியில் மீன்கேட்டு அதிமுக பிரமுகர் தகராறு.. மீன்பிடி தொழிலாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல். பகீர் வீடியோ..

By Ezhilarasan BabuFirst Published Apr 12, 2021, 3:54 PM IST
Highlights

இது தொடர்பாக மீன்வளத்துறை சார்பில் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், போலிஸ் மீன்பிடி தொழிலாளர்களை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.  

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை பகுதியில் அதிமுக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருக்கு இலவசமாக மீன் கொடுக்க மறுத்ததால், அதிமுக பிரமுகர் தலைமையில் அரிவாள், கத்தி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சென்ற ரவுடி கும்பல், பொதுப்பணித்துறை மீன்பிடி ஒப்பந்த தொழிலாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொழிலாளியின் காது  துண்டானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மீன்வளத்துறை சார்பில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகிறது. அணையில் உள்ள வளர்ப்பு மீனை பிடிக்க 9 பரிசல்கள் மற்றும் 18 பேரை மீன்வளத்துறை அனுமதித்துள்ளது. இவர்கள் தினசரி பிடிக்கும்  மீன்கள் மீன்வளத்துறையால் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கி செல்வது வழக்கம். சில நேரங்களில் ஆளுங்கட்சியினர் மீன்களை அள்ளி செல்வது வழக்கம். இதனால் மீன் பிடிப்பவர்களுக்கும், அதிமுகவினருக்கும் பிரச்சனை ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அல்போன்ஸ் உறவினர்களுடன் சென்று பொதுப்பணித்துறை சார்பில் பிடிக்கப்பட்ட மீன்களை அள்ளி சென்றுள்ளார். இதனை தட்டி கேட்ட மீன்பிடி தொழிலாளர்களை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக மீன்வளத்துறை சார்பில் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், போலிஸ் மீன்பிடி தொழிலாளர்களை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அதிமுக பிரமுகர் அல்போன்ஸ் தலைமையில் அரிவாள், கத்தி, கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சென்ற கும்பல், அணை பகுதியில் மீன் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பிகொண்டிருந்த மீன்பிடி தொழிலாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். உயிருக்கு பயந்து தப்பி ஓடிய தொழிலாளர்களை ஓட, ஓட விரட்டி கொடூரமாக தாக்கினர். தாக்குதலில் மீன்பிடி தொழிலாளர் கணேசன்  காது கிழிந்து, தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. மேலும் ரமேஷ் என்பருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து அதிமுக கும்பலை தேடி வருகின்றனர். அதிமுகவினர் மீன்பிடி தொழிலாளர்களை ஆயுதங்களுடன் தாக்கும் விடியோ சமுகவலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!