போன் செய்து ஸ்டாலினை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்..?? மேடையில் உடைத்த அன்பில் மகேஷ்.

By Ezhilarasan BabuFirst Published May 11, 2022, 12:38 PM IST
Highlights

எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தொலைபேசியில் பேசுகையில் தமிழக அரசையும் முதல்வரையும் பாராட்டுகிறார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தொலைபேசியில் பேசுகையில் தமிழக அரசையும் முதல்வரையும் பாராட்டுகிறார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசியதாவது:-  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பணியை தொடங்கியது ஆயிரம் விளக்கில் இருந்து தான், அவரது சேவை நடைபெற முதல் விதை போட்ட இடம் ஆயிரம் விளக்கு. எதிர்க்கட்சிகள் தேடித் தேடிப் பார்த்தாலும் குறை கண்டுபிடிக்க முடியவில்லை, அனைத்து தரப்புக்கும் ஆன ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜூன் மூன்றாம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா, இனி அரசு விழாவாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருப்பது நம் எல்லோருக்கும் பெருமை. திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 60 சதவீத வாக்குகள் நிறைவேற்றப்பட்டு விட்டது. மொத்தமுள்ள இந்த ஐந்து வருடத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தருவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். முதல்வரின் முகவரி திட்டம்  மூலம் அமைச்சர்களாக இருக்கும் நாங்களே தவறு செய்திருந்தால் கூட நீங்கள் நேரடியாக முதல்வரிடம் தெரிவிக்கலாம். சிங்கார சென்னை என்பது முதலமைச்சரின் கனவு திட்டம், சென்னையில் 2.0 திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் அறிவித்து வருகிறார். முதியோர் ஓய்வு ஊதியம் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து முதலமைச்சர் செய்து வருகிறார்.

ஆயிரம் விளக்கு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 500 கோடியில் மேம்பாலம் தேனாம்பேட்டையில் அமைக்கப்பட உள்ளது. 120 கோடி ரூபாய் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளார், காலை நேரத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளார், எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரை தொலைபேசியில் பேசுகையில் வியந்து பாராட்டும் அளவிற்கு தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார். திராவிட மாடல் ஆட்சி திறம்பட செயல்படுகிறது. இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தேவை இந்தியா முழுவதும் தேவைப்படுகிறது. எனவே அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.
 

click me!