அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன்கூட அல்ல.. நகைச்சுவை காமெடியன்.. நக்கலடித்த ஸ்டாலின்..

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2021, 11:08 AM IST
Highlights

அண்ணாவின் மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாக, தமிழ்நாட்டு மக்களின் மீது ஆணையாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளோம். நமது தேர்தல் அறிக்கையை அனைவரும் கதாநாயகன் என்று அறிவித்துள்ளார்கள்,

அண்ணாவின் மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாக, தமிழ்நாட்டு மக்களின் மீது ஆணையாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளோம். நமது தேர்தல் அறிக்கையை அனைவரும் கதாநாயகன் என்று அறிவித்துள்ளார்கள்,

அவர்களின் தேர்தல் அறிக்கை என்பது வில்லன், வில்லன் கூட அல்ல நகைச்சுவை காமெடியன், போன்று உள்ளது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார். திமுகவின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் மதுரையில் பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுகவினர் நமது தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் காப்பி எடுத்து வழங்கியுள்ளார்கள். சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொல்வது போல, ஆட்சியை விட்டு செல்வதற்குள் ஒன்றொன்றாக சொல்லிவிடுகிறார்கள். 

ஒவ்வொரு வீட்டிற்கும் ரயில் விட போகிறோம் என்று பல்வேறு அறிவிப்புகளை இன்னும் விட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு வாய்ப்பில்லை. கொரோனா  ஆரம்பித்த காலகட்டத்தில் நாம் தான் முதன் முதலாக குரல் கொடுத்தோம், உயிருக்கு ஆபத்தான நோய் என்று சொல்லி வந்தோம், முகக் கவசம் வழங்குங்கள் என்று சட்டமன்றத்தில் துரைமுருகன் குரல் கொடுத்தார். அலட்சியமாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் மறுநாளே தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முகக்கவசம் அணிந்து வந்தார். 

இரண்டாம் அலையாக வைரஸ் பரவி வருகிறது. தயவுசெய்து பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வாருங்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முயல வேண்டும். வைரஸ் காலகட்டத்தில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அனைவருக்கும் 5000 வழங்குங்கள் என்று தொடர்ந்து சொல்லி வந்தேன், ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கியது. தற்சமயம் தேர்தல் அறிக்கையில் நாம் சொல்லி உள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன்  மீதி 4 ஆயிரத்தை வழங்குவோம்.தேர்தல் அறிக்கையில் பல நல்ல அறிவிப்புகளை நாம் வெளியிட்டுள்ளோம். 

மதுரையில் ஜவுளி பூங்கா நூற்பாலைகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் சின்னம்மா, மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு தொகுதியில் தளபதி, மதுரை திருச்சிக்கு மதிமுகவின் பூமிநாதன் இவர்களுக்கெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

 

click me!