அவங்க என்னவேனா பண்ணட்டும் நாங்க பிஜேபியை எதிர்க்க மாட்டோம்... நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எடப்பாடியார் நெத்தியடி பதில்...

First Published Jul 19, 2018, 12:59 PM IST
Highlights
AIADMK does not support a no-confidence motion


அந்த நேரத்தில் நமக்கு யாரும் துணை நிற்கவில்லை. அவர்களுடைய, மாநிலத்திற்கு பிரச்சனை என்று வந்தது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என முதல்வர் எடப்பாடி தெளிவாக கூறியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் பிஜேபி அரசு மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க தேவையான எம்.பிக்கள் பா.ஜ.க வசம் உள்ளது.

ஆனால் எதிர்கட்சிகள் மிரண்டு போகும் அளவிற்கு எம்.பிக்கள் ஆதரவுடன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் பிஜேபியின் எண்ணம். ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிஜேபி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்துள்ளது.

எனவே எதிர்கட்சிகள் அவமானப்படும் வகையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் பிஜேபியின் வியூகம். இதற்கு கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்டவை ஒப்புக் கொண்டுவிட்டன. இருந்தாலும் சிவசேனா தற்போது வரை நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிவசேனா வராவிட்டாலும் அ.தி.மு.க வசம் உள்ள 37 எம்.பிக்களின் ஆதரவை ஒட்டு மொத்தமாக பெற வேண்டும் என்பது தான் பிஜேபியின் தற்போதைய எண்ணம்.

ஏனென்றால் ஏற்கனவே தங்கள் வசம் உள்ள எம்.பிக்கள் மற்றும் அ.தி.மு.க எம்.பிக்களை சேர்த்தால் ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டிவிடும் என்று கணக்கு போடுகிறது பிஜேபி. இதற்காக அ.தி.மு.கவின் தலைமையை உடனடியாக பிஜேபி தொடர்பு கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், மேலும் எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடியார், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் கொண்டுவரவில்லை. ஆந்திர பிரச்சனைக்காகவே தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. தமிழகத்தின்  பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் 22 நாட்கள், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வேண்டும் என அவை நடக்க முடியாத அளவிற்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தோம்.

அப்போது யார் நமக்கு குரல் கொடுத்தார்கள்? யார் முன்வந்தார்கள்?  நமக்கு பிரச்சனை வந்தபோது அதை தீர்க்க எந்த மாநிலமும் முன்வரவில்லை. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தமிழக மக்களுக்காக, தமிழக விவசாய பெருமக்களுக்காக தொடர்ந்து 22 நாட்கள்,  நம் உரிமையை பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து நாடாளுமன்ற நிகழ்வே முடங்கிவிடும் சூழ்நிலையயை ஏற்படுத்தினார்கள்.

அந்த நேரத்தில் நமக்கு யாரும் துணை நிற்கவில்லை. அவர்களுடைய, மாநிலத்திற்கு பிரச்சனை என்று வந்தது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார்கள். நம்மிடமும் உதவியை கேட்கிறார்கள். நம் மாநிலத்திற்கு பிரச்சனை வந்த போது யாராவது துணை நின்றார்களா? என கேள்வி எழுப்பிய அவர் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்பது தெளிவாக தெரிகிறது.

click me!