திடீர் திருப்பம்.. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி? எத்தனை தொகுதிகள் தெரியுமா? அதிர்ச்சியில் பாஜக!

By vinoth kumarFirst Published Feb 23, 2024, 12:15 PM IST
Highlights

அதிமுக, பாஜக கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இணையும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. குறிப்பாக பாமக, தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறார் என்பது தெரியாமல் இருந்து வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்து வருகிறது. ஆளும் திமுக கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. திமுகவில் புதிய வரவாக மக்கள் நீதி மய்யம் இடம் பெற உள்ளது. 

Latest Videos

இதையும் படிங்க: இபிஎஸ் மீதுள்ள கோபத்தில் ஸ்டாலினை வெற்றிபெற செய்தீர்கள்.. இப்போ பாத்தீங்களா என்ன ஆச்சு.. டிடிவி.தினகரன்.!

இந்நிலையில், அதிமுக, பாஜக கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இணையும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. குறிப்பாக பாமக, தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போகிறார் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. பாமக பொறுத்தவரையில் அதிக தொகுதிகள் தரக் கூடிய கட்சியுடன் கூட்டணி என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். 

மற்றொரு கட்சியான தேமுதிக பாஜக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக தயாராகிவிட்டதாகவும், பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் நேற்று பிரேமலதா அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க: காத்திருந்தது எல்லாம் வீண்... இனி அதிமுகவுடன் கூட்டணி இல்லை.? முடிவுக்கு வந்தது பாஜகவின் ரகசிய பேச்சுவார்த்தை

ஆனால், இதனை அதிமுக தரப்பில் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தேமுகவுடன் அப்படி எதுவும் பேச்சார்வார்த்தை நடத்தவில்லை கூறியுள்ளனர். தேமுதிக தொகுதி எண்ணிக்கை மற்றும் பேரத்தை உயர்த்தவே இதுபோன்ற செய்தியை தேமுதிக தரப்பினரே வெளியிடுவதாக கூறப்படுகிறது. 

click me!