அதிமுக.. மாவட்டங்களை பிரித்து புதிய மா.செக்களை நியமித்தது.. குஷியில் அதிமுக நிர்வாகிகள்..!

By T BalamurukanFirst Published Nov 12, 2020, 11:45 PM IST
Highlights

திமுக தலைமை கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாநகர் அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிகளும் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என பிரித்து வருகின்றன. திமுகவும் அதிமுகவும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து மாவட்டங்களை பிரித்து மாவட்டங்களில் உள்ள உட்கட்சி பூசலை சரி செய்து கொடுத்து வருகின்றனர். இதனால் கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்து காணப்படுகிறார்கள். இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ நியமிக்கும் போது நிர்வாகம் செய்யவும் அது வசதியாக இருப்பதாகவும் கட்சி மேலிடம் நினைக்கின்றது.

இரண்டு தொகுதி என்கிற போது மா.செ பணம் செலவு செய்வது முதல் வெற்றிக்காக உழைப்பது வரை எளிமைப்படுத்தப்பட்டு விடுகின்றது. எனவே அதிமுக தனது கட்சி பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அதிமுகவில் திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக ஒபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாநகர் அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.பி சி.மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக பிகே வைரமுத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

click me!