அவசரமாக கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்... கூட்டணி குறித்து முக்கிய முடிவு!

By vinoth kumarFirst Published Feb 5, 2019, 10:57 AM IST
Highlights

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 8-ம் தேதி நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்தக் கூட்டத்தில் வருகிற மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.  அதிமுகவைன் பொறுத்தவரை மக்களவை தேர்தல்  முக்கியம். அதை விட முக்கியம் மக்களவை தேர்தலோடு வர உள்ள 21 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல். இதனால், மக்களவை தேர்தலை கவனிக்க சிறப்பு குழு, சட்டப்பேரவை இடைத்தேர்தலை எதிர்கொள்ள சிறப்பு குழு அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக  ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்றால், கட்டாயம் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஏற்கெனவே கோஷ்டி பூசல்கள் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில்  அதிமுக நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.  

இந்த கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 8-ம் தேதி மாலை 4.30 மணிக்கு  நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

click me!