அதிமுகவில் ஒற்றை தலைமையா? 14 ஆம் தேதி அவசரமாக கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Jun 12, 2022, 12:14 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு வருகின்ற 23 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், பொதுக்குழுவில் எடுக்கவுள்ள முக்கிய முடிவுகள் தொடர்பாக ஆலோசிக்க  அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் அவசரமாக கூடுகிறது

அதிமுகவில் ஒற்றை தலைமையா?

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சந்தித்த அனைத்து தேர்தலும் தோல்விலேயே முடிந்துள்ளது. இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்ற அதிமுக திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்துள்ளது. அதிமுகவும் இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சந்தர்ப்பம் சாதகமாக அமைந்து வருகிறது. எனவே அதிமுகவில் இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமையே வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.  அதிமுகவுக்கு மீண்டும் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என தொண்டர்களின் ஒரு பக்கம் தன் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை என்றும் சசிகலா என்ற பேச்சு அதிமுகவில் எப்போதும் இல்லை என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர். சசிகலாவோ அடுத்து நடைபெறும் ஆட்சி அதிமுக ஆட்சிதான் அதற்கு நான் தலைமை ஏற்பேன என உறுதி பட கூறி வருகிறார்.  இந்த பரபரப்பான நிலையில் வருகின்ற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழுக் கூட்டம்  நடைபெறுகிறது.இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ?

இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 - வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற உள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது சம்பந்தமாக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனை கூட்டம் 14.6.2022 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில்,23 ஆம் தேதி  செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள், தீர்மானங்கள் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 
மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தற்போது தமிழ்மகன் உசேன்  உள்ள நிலையில் புதிய அவைத்தலைவர் நியமிப்பது தொடர்பாக  ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் எதிர்கட்சியாக செயல்படுவது யார்? பாஜக நிர்வாகியின் பேச்சுக்கு ஓபிஎஸ் பதிலடி

click me!