அதிமுகவுக்கு அடுத்தடுத்து ஆப்பு சீவும் பிஜேபி...! அமித்ஷாவின் அந்தர் பிளான்...! பஸ்ட் அவுட் ஆகப்போறது மெயின் தல தான்?

By Vishnu PriyaFirst Published Jan 13, 2019, 3:56 PM IST
Highlights

சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பெரும்பான்மை கவிழ்ந்து, ஆட்சியே பறிபோனாலும் ஆச்சரியமில்லை! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அ.தி.மு.க.வை விரட்டி விரட்டி வேட்டையாட துவங்கிய பி.ஜே.பி.யின் கைங்கர்யத்தால் அ.தி.மு.க வி.ஐ.பி.க்கள் யாராலும் நிம்மதியாய் தூங்கமுடியவில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

அரசியலில் நிரந்தர நண்பன் இல்லவே இல்லை! என்பதை தெளிவாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி. - அ.தி.மு.க. இடையிலான மோதல்.

கூட்டணிக்கு பணிந்து வராத எடப்பாடி பழனிசாமியை நோக்கி ‘கொடநாடு கொலை, கொள்ளைகளின் மாஸ்டர் பிரெய்ன்’ எனும் பூதத்தை மேத்யூஸ் ரூபத்தில் கிளப்பிய மோடி அமித்ஷா கூட்டணி, அடுத்து பன்னீர்செல்வத்துக்கு வழக்கு ரூபத்தில் ஆப்பு ரெடி செய்கிறார்கள் என்கிறார்கள். 

தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட பதினோறு பேரை தகுதி நீக்கம் செய்ய கோரும் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மிக சமீபத்தில் இது விசாரணைக்கு வந்தபோது நடந்த விவாதங்கள், அடுத்த குறி பன்னீர்தான் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளன அ.தி.மு.க. தரப்புக்கு. வழக்கு விசாரணையின் போது “அந்த பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் விரைந்து முடிவெடுத்த சபாநாயகர் இதில் மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று நீதிபதிகள் கேட்க, “இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்ததால் ஸ்பீக்கர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.” என்றார்  சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான வக்கீல். 

ஆனாலும் விடாத நீதிபதிகள் “கட்சி தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருந்த போதுதானே பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் முடிவெடுத்தீர்கள்? இப்போ மட்டும் என்ன விதிவிலக்கு?” என்று இறுக்கிப் பிடித்ததோடு “கட்சியின் சின்னத்தையும், பெயரையும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு 2017 மார்ச் மாதமே தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது. அதன் பிறகும் இந்த பதினோறு பேர் விஷயத்தில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருபத்தியோறு மாதங்களா என்ன பண்ணிட்டிருந்தீங்க?” என்று விளாசியிருக்கின்றனர். 

ஆக இந்த வழக்கு விரைவில் முடிவு பெற்று, பன்னீர் உள்ளிட்ட பதினோறு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விஷயத்தில் தீர்ப்பு வந்துவிடும் போல. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க. குடைச்சல் கொடுக்கும் பட்சத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு பன்னீர் உள்ளிட்டோருக்கு பாதகமாக சென்று, சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பெரும்பான்மை கவிழ்ந்து, ஆட்சியே பறிபோனாலும் ஆச்சரியமில்லை! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அ.தி.மு.க.வை விரட்டி விரட்டி வேட்டையாட துவங்கிய பி.ஜே.பி.யின் கைங்கர்யத்தால் அ.தி.மு.க வி.ஐ.பி.க்கள் யாராலும் நிம்மதியாய் தூங்கமுடியவில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

click me!