பல குழப்பங்களை செய்து உள்ளாட்சி தேர்தலை நிறுத்த சதி... முதல்வர் எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு..!

By vinoth kumarFirst Published Nov 29, 2019, 2:51 PM IST
Highlights

தேர்தலை நிறுத்துவதற்கான சதி திட்டத்தை தீட்டியும், அதற்கான வழிவகைகளை செய்துவிட்ட பின்னர் திமுக தான் நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது என முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். மேலும், மீடியாக்களும், விவாதம் முதல் செய்திகள் வரை திமுக தான் தடை உத்தரவை பெற முயற்சி செய்கிறது எனக்கூறுவது வேதனையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது.

தொடர்ந்து பல குழப்பங்களை செய்து உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக சதி செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாத அதிமுக அரசு, ஏதாவது சில காரணங்களை சொல்லி வருகிறது. நீதிமன்றத்திற்கு சென்று யாராவது தடைபெறுவார்களா? தடை பெற்றால் தேர்தலை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுகிறது.

தேர்தலை நிறுத்துவதற்கான சதி திட்டத்தை தீட்டியும், அதற்கான வழிவகைகளை செய்துவிட்ட பின்னர் திமுக தான் நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது என முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். மேலும், மீடியாக்களும், விவாதம் முதல் செய்திகள் வரை திமுக தான் தடை உத்தரவை பெற முயற்சி செய்கிறது எனக்கூறுவது வேதனையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர், மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். பின்னர், மறைமுக தேர்தல் நடக்கும் என அறிவித்தனர். தொடர்ந்து, பல குழப்பங்களை செய்து உள்ளாட்சி தேர்தலை நிறுத்த அதிமுக சதி செய்து வருகிறது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்தினாலும், அதனை சந்திக்க திமுக தயாராக உள்ளது என்றார். இரு கட்சிகளும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், இரண்டு கட்சிகளுக்குமே உள்ளாட்சி தேர்தலை நடத்த விருப்பமில்லை என்றே கூறப்படுகிறது.  

click me!