ஆயுள் தண்டனை கைதி பிரதமருக்கு எழுதிய ரகசிய கடிதம்...?? என்னது...? கொலை செய்யக் கோரினாரா..??

Published : Nov 29, 2019, 01:46 PM IST
ஆயுள் தண்டனை கைதி  பிரதமருக்கு எழுதிய ரகசிய கடிதம்...?? என்னது...?  கொலை செய்யக் கோரினாரா..??

சுருக்கம்

தான் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து  விட்டதகவும்,  பல ஆண்டுகளாக விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால்,  விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ள தன்னை கருணைக் கொலை செய்துவிடும்படி பாரத பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் பரவியுள்ளது.

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் தன்னை கருணைக் கொலை   செய்து விடும்படி பிரதமருக்கு ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி கடிதம் எழுதி இருப்பதாக சிறைத்துறை தகவல்கள் பரபரக்கின்றன.  ஆனால் இந்த தகவல் உண்மைதானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.  முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சாந்தன்,  முருகன் ,  பேரறிவாளன் ,  நளினி ,  ராபர்ட் பயஸ் ,  உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் ஆண்கள் சிறையில் முருகனும்,  பெண்கள் சிறையில் அவரது மனைவி நளினியும் அடைக்கப்பட்டுள்ளனர் . தன்னை விடுதலை செய்யக்கோரி  நேற்றி முதல்,  தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கியிருக்கிறார் நளினி.  இந்நிலையில் சிறை அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளார் .   இதற்கிடையே தான் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து  விட்டதகவும்,  பல ஆண்டுகளாக விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால்,  விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ள தன்னை கருணைக் கொலை செய்துவிடும்படி பாரத பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளதாக  தகவல் பரவியுள்ளது.  ஆனால் இந்த தகவல் உண்மைதானா என்பது இன்னும் உறுதியாகவில்லை . ஆனால்   இதுகுறித்து சிறைத்துறையில்  பரவலான பேச்சு அடிபட்டு வருகிறது .  அதே நேரத்தில் இது குறித்து சிறைத்துறையில் விசாரித்ததற்கு  தகவல் கூற மறுத்திவிட்டனர்.  அதே நேரத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நளினி,  அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளார் ஆனால் அந்த மனுவில் என்ன எழுதி இருக்கிறது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளனர். 

இன்னும் சிலர்,   தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி நளினி பிரதமருக்கு  மனு அளித்துள்ளதாகவும்,  அதை சிறைத்துறை இரகசியமாக வைத்திருப்பதாகவும்  தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்த அவரது வழக்கறிஞர் புகழேந்தியை தொடர்ந்து கொண்டே கேட்டதற்கு தனக்கும் அந்த தகவல்  வந்துள்ளது,  ஆனால் அது உண்மையா என்பது தெரியவில்லை,  இது குறித்து ஜெயில் அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்,  ஓரிரு நாட்களில் இது குறித்து நளினியை சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.  அவரது வழக்கறிஞர் நளினியை சந்தித்த பின்னரே அது குறித்த  தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!