கூட்டணிக்கு வந்தால் பெட்டி நிறைய துட்டு! தே.மு.தி.க.வுக்கு வலை வீசும் அ.தி.மு.க!

By Selva KathirFirst Published Jan 30, 2019, 9:40 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முன்வந்தால் தே.மு.தி.க போட்டியிடும் தொகுதியில் ஆகும் செலவை தாங்கள் ஏற்பதாக அ.தி.மு.க தரப்பில் இருந்து விஜயகாந்திற்கு ஆசைவார்த்தை காட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முன்வந்தால் தே.மு.தி.க போட்டியிடும் தொகுதியில் ஆகும் செலவை தாங்கள் ஏற்பதாக அ.தி.மு.க தரப்பில் இருந்து விஜயகாந்திற்கு ஆசைவார்த்தை காட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் தே.மு.தி.க சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை அமைக்கும் குழுவை விஜயகாந்த் அமைத்து உத்தரவிட்டார். குழு அமைத்து ஒரு வாரத்திற்கு பிறகு தே.மு.தி.கவிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அ.தி.மு.கவிடம் இருந்து தூது வந்ததாக சொல்லப்படுகிறது. அ.தி.மு.கவுடன் கூட்டணியை விஜயகாந்த் விரும்பமாட்டார் என்பதால் இந்த அழைப்பை சுதீஷ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் 2011ம் ஆண்டு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து அதன் பிறகு தே.மு.தி.க பட்டபாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல் தே.மு.தி.கவில் இருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஜெயலலிதா செய்த அரசியல் தான் விஜயகாந்திற்கு உச்சகட்ட டென்சனை வரவழைக்க காரணமாக இருந்தது. இந்த சமயத்தில் அ.தி.மு.கவுடன் மீண்டும் கூட்டணி என்கிற பேச்சையே விஜயகாந்த் விரும்பமாட்டார் என்கிறார்கள்.

 

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க – அ.தி.மு.க எனும் இரண்டு கட்சிகளின் கூட்டணிககு தான் வெற்றி வாய்ப்பு  உண்டு. தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவிற்கு இடம் அளிக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். எனவே ஒன்று அ.தி.மு.க அணியில் விஜயகாந்த் இணைய வேண்டும், இல்லை என்றால் தினகரனுடன் சேர வேண்டும். ஆனால் தினகரனுடன் சேர்வதற்கு பதில் தே.மு.தி.க அ.தி.மு.கவுடனேயே கூட்டணி வைக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.

 

இப்படி குழப்பமான ஒரு நிலையை எதிர்கொண்டுள்ளதால் அ.தி.மு.க தரப்பில் இருந்து தே.மு.தி.கற்கு அடுத்தடுத்து ஆசை வார்த்தைகள் கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் தற்போதைய சூழலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்றால் தங்கள் கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.கவை சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர் அ.தி.மு.க பெருந்தலைகள். 

எனவே முதற்கட்டமாக சுதீசை வழிக்கு கொண்டு வர நடவடிக்கை தீவிரமாகியுள்ளதாக சொல்கிறார்கள். எதிர்பார்க்கும் அளவிற்கு கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்க முடியவில்லை என்றாலும் ஒதுக்கும் தொகுதியில் ஆகும் செலவை கவனித்துக் கொள்வதாக சுதீஷ்க்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து தாக்கீது அனுப்பப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அ.தி.மு.கவுடன் கூட்டணி என்றாலும் அனை எப்படி நியாயப்படுத்துவது என்கிற யோசனையில் சுதீஷ் ஆழ்ந்துள்ளதாக கூறுகிறார்கள்.

click me!