அதிமுக: முடிவுக்கு வந்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி.. கட்சிக்கு ஓபிஎஸ், பொதுச்செயலாளர் சசிகலா.!பலே பாஜக பிளான்

By T BalamurukanFirst Published Oct 6, 2020, 9:09 PM IST
Highlights

"நாளை நமதே" என்று முழங்கிய ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் நாளை கூட்டாக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க இருக்கிறார்கள். முதல்வர் வேட்பாளராக இபிஎஸ், கட்சியின் வழிகாட்டுக்குழு தலைவராக ஓபிஎஸ் இருப்பார் என்று நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா அறிவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.அதற்கான வேலையை பாஜக நகர்த்திக்கொண்டு வருகிறது என்பது தான் அதிமுக களநிலவரம்.


"நாளை நமதே" என்று முழங்கிய ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் நாளை கூட்டாக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க இருக்கிறார்கள். முதல்வர் வேட்பாளராக இபிஎஸ், கட்சியின் வழிகாட்டுக்குழு தலைவராக ஓபிஎஸ் இருப்பார் என்று நாளை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா அறிவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.அதற்கான வேலையை பாஜக நகர்த்திக்கொண்டு வருகிறது என்பது தான் அதிமுக களநிலவரம்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது. நீடித்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓபிஎஸ் போட்டியிடுவாரா? அல்லது சசிகலாவால் கைகாட்டப்பட்ட ஈபிஎஸ் போட்டியிடுவாரா? என்பது குறித்து வரும் 7ம் தேதி அவர்களே இணைந்து அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இதனை பற்றி ஆலோசிக்க செயற்குழு கூட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. 

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை நாளை 7ஆம் தேதி அறிவிக்க இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது ஆதரவாளர்களும் இன்று இரண்டு கட்டமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ்:
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் முதல்வர் வேட்பாளர் விசயத்தில் விடாப்பிடியாக எடப்பாடிக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார்.செயற்குழு கூட்டம் காரசாரமாக முடிவடைந்தது. அதன் பிறகு தேனிக்கு விரைந்த ஓபிஎஸ் அங்கே தனது ஆதரவு முன்னாள், இன்னாள் மாவட்ட நிர்வாகிகளோடு தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வந்தார். ஜெயலலிதா மூன்று முறை இவரை முதல்வராக்கினார். அவரது மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டார். அதன் பின்னரே துணை முதல்வர் பதவி நிதித்துறை, வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சரானார். இவரை நம்பி வந்தவர்கள் ஏமாற்றத்துடனே இருந்தனர்.இதன் விரக்தியால் ராஜகண்ணப்பன் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

வழிகாட்டுக்குழுவிற்கு ஒருபடியாக எடப்பாடி ஒத்துக்கொண்டதால் ஓபிஎஸ்.. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் ஒரு கண்டிசன் வழிக்காட்டுக்குழுவின் தலைவர் நான் தான். என் தரப்பில் 5பேர் எடப்பாடி தரப்பில்6 பேர்.ஆக மொத்தம் ஓபிஎஸ்சை சேர்த்து 12பேர்.

இவர் இல்லத்தில் வைத்திலிங்கம், கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். சாதிக்கு ஒருவர் இந்த குழுவில் இடம் பெற வேண்டும் என்று முடிவெடுத்து உறுப்பினர்கள் போடப்பட்டுள்ளது.தலித்துக்கள் சார்பில் சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இடம் பெற இருக்கிறார்கள்.பாஜக... அதிமுகவை ஓடவிட்டு கடிவாளத்தை இழுத்து பிடித்திருக்கிறது. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கட்சி தலைவர் ஓபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா என்று பாஜக ஏற்கனவே முடிவு செய்து விட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவுபெற்று விட்டது என்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

click me!