அதிமுக முக்கிய அமைச்சரின் மனைவி காலமானார்..!! தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சி..!!

Published : Aug 28, 2020, 11:44 AM ISTUpdated : Aug 28, 2020, 11:45 AM IST
அதிமுக முக்கிய அமைச்சரின் மனைவி காலமானார்..!! தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சி..!!

சுருக்கம்

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியணின் மனைவி கலைச்செல்வி காலமானார், அவருக்கு வயது (61) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியணின் மனைவி கலைச்செல்வி காலமானார், அவருக்கு வயது (61) உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன், அதிமுகவின் சீனியர் அமைச்சர்களின் ஒருவராக இருந்து வருகிறார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஓரடியம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அவார். 

இவரது மனைவி கலைச்செல்வி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக் குறைவுடன் இருந்து வந்தார். உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ஓ.எஸ் மணியன் கலைச்செல்வி தம்பதியருக்கு பாரதி, வாசுகி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சாலை மார்க்கமாக வாகனத்தின் மூலம் சென்னையிலிருந்து உடல் ஓரடியம் புலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 

இன்று இரவு 8 மணிக்கு அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுக வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று மாலை நாகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்ட அரசு விழா நடந்தது, அதில் அமைச்சர் ஓ.எஸ் மணியன் கலந்து கொண்ட நிலையில், அவரது மனைவி உடல் நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அமைச்சர் உடனே சென்னை விரைந்த நிலையில் அத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!