அம்மாடியோவ்... அதிமுக வேட்பாளருக்கு இவ்வளவு சொத்தா... திமுக வேட்பாளரை கடாசித்தள்ளிய இசக்கி சுப்பையா..!

Published : Mar 17, 2021, 04:20 PM IST
அம்மாடியோவ்... அதிமுக வேட்பாளருக்கு இவ்வளவு சொத்தா... திமுக வேட்பாளரை கடாசித்தள்ளிய இசக்கி சுப்பையா..!

சுருக்கம்

அதிக சொத்து வைத்துள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணா நகர் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை பின்னுக்குத்தள்ளி அதிமுக வேட்பாளராக இசக்கி சுப்பையா முதலிடம் பிடித்துள்ளார்.  

வரும், சட்டப்பேரவை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் இதுவரை சொத்து மதிப்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முதலிடம் பிடித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பாக, அமமுகவில் இருந்தவர் இந்த இசக்கி சுப்பையா. பின்னர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எடப்பாடி பழனி சாமி ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது , டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவளித்த 17 எம்.எல்.ஏ.,க்களை இசக்கி முத்து தனது ரிசார்டில் தங்க வைத்தார். பெரும்பணக்காரரான இசக்கி சுப்பையா அடுத்து அதிமுகவில் இணைந்தார். 

இந்நிலையில் அதிமுக சார்பில் அவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது வேட்பு மனுவில், ’அசையா சொத்துக்கள் தனது பெயரில் ரூ.208.96 கோடிஅவரது மனைவி பெயரில் ரூ.30.93 கோடி மொத்தம் ரூ.239.9 கோடி உள்ளது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு கணக்குப்படி இசக்கி சுப்பையாவின் மொத்த சொத்துக்கள் ரூ.246.76 கோடி உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு இசக்கி சுப்பையா தாக்கல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்கள் மதிப்பு ரூ.60.02 கோடியாக இருந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. 

அதிக சொத்து வைத்துள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணா நகர் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனை பின்னுக்குத்தள்ளி அதிமுக வேட்பாளராக இசக்கி சுப்பையா முதலிடம் பிடித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!