தேமுதிகவை விட்டுவிட்டால் ஜஸ்ட் மிஸ்ஸில் தோல்வியா? வளைத்துப் போடவேண்டிய கட்டாயத்தில் பிஜேபி!!

By sathish kFirst Published Feb 21, 2019, 10:40 AM IST
Highlights

தேமுதிகவை நழுவ விட்டால் சில  தொகுதிகளில் இழுபறி ஏற்பட வாய்ப்பிருப்பதாலும், பல தொகுதிகளில் ஜஸ்ட் மிஸ்ஸில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதாலும், தேமுதிகவை வளைத்துப் போடும் கட்டாயத்தில் உள்ளதாம் பிஜேபி. 

சென்னை, அதிமுக, - தேமுதிக, கூட்டணி இழுபறிக்கு தீர்வு காண  பிஜேபி தரப்பில் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஏழு தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளன. 

பிஜேபிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கூட்டணியில் இடம்பெறுவதற்காக தேமுதிக தரப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வந்தது. தேமுதிக தரப்பில் ஒன்பது தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்கப்பட்டது. அதிமுக தரப்பில் 5 தொகுதிகள் வரை தருவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது.ராஜ்யசபா பதவி குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பாமகவிற்கு அதிக தொகுதிகள் மட்டுமின்றி ராஜ்யசபா எம்பி. பதவியும் ஒதுக்கப்பட்டதால் தேமுதிக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. வடமாவட்டங்களில் மட்டுமே கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமகவிற்க்கே ஏழுன்னா தமிழகம் முழுவதும் கணிசமான வாக்கு வங்கிகளுடன் இருக்கும் எங்களுக்கு ஒன்னு  அதிகமாவே கொடுக்கலாமே, அதனால் அக்கட்சியை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக பெற்றால் தான் கட்சியினரை திருப்திப்படுத்த முடியும் என்ற நிலை தேமுதிக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆனால் தேமுதிகவிற்கு ஏற்கனவே நிர்ணயித்த தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும்' என கறாராக கூறி வருகிறது அதிமுக தலைமை. கூட்டணி இழுபறிக்கு தீர்வு காணும் முயற்சியில் மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளனர். தன் நெருங்கிய தோழி தமிழிசை வாயிலாகவும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பேசி வருகிறார். ஓரிரு நாட்களில் இழுபறி முடிவுக்கு வரும் என பிஜேபி தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்காக இந்த கெஞ்சல் எனக் கேட்டால், தொகுதிக்கு சுமார் ஒரு லட்சம் வாக்கு வங்கியை வைத்திருக்கும் விஜயகாந்த்தால், எந்த விதத்திலும் தோல்வியை சந்தித்துவிடக்கூடாது. அதேபோல சில தொகுதிகளில் இழுபறி ஏற்பட வாய்ப்பிருப்பதால், பல தொகுதிகளில் ஜஸ்ட் மிஸ்ஸில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதாலும், தேமுதிகவை வளைத்துப் போடும் கட்டாயத்தில் உள்ளதாம் பிஜேபி. 

click me!