’உன்னால் நான் கேட்டேன்... என்னால் நீ கெட்டாய்...’ அதிமுக - பாஜக இடையே ஆரம்பித்த அக்கப்போர்..!

Published : Jun 12, 2019, 05:33 PM IST
’உன்னால் நான் கேட்டேன்... என்னால் நீ கெட்டாய்...’ அதிமுக - பாஜக இடையே ஆரம்பித்த அக்கப்போர்..!

சுருக்கம்

அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்றும் பாஜகவின் தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்றும் இரு கட்சியினருக்கும் இடையே பூசல் வெடிக்கத் தொடங்கி உள்ளது. 

அதிமுகவின் தேர்தல் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்றும் பாஜகவின் தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்றும் இரு கட்சியினருக்கும் இடையே பூசல் வெடிக்கத் தொடங்கி உள்ளது.

 

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து கலமிறங்கிய அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு அதிமுகவின் இரட்டை தலைமை காரணம் என கட்சிக்குள் சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் இந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்க இன்று அதிமுக ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்றது.

 

இதை தவிர்த்து பாஜவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் அதிமுக தோல்வியை சந்தித்தது என்ற பேச்சும் அதிமுகவினரிடையே அதிகரித்துள்ளது. இது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்த நிலையில் இப்போது செய்யாறு எம்எல்ஏ மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதற்கிடையே அதிமுக தொண்டர்கள், அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். தனித்து நின்றிருந்தால் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என பாஜகவுக்கு எதிராக வெளிப்படையாகவே பேச துவங்கியுள்ளனர். இதனால், பாஜக - அதிமுகவின் இணக்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!