அதிமுக - அமமுக இணைப்பா? தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பரபரப்பு தகவல்..! |

Published : Mar 01, 2021, 02:30 PM IST
அதிமுக - அமமுக இணைப்பா? தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பரபரப்பு தகவல்..! |

சுருக்கம்

தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் அதிமுக - பாஜக இடையே இழுபறி இல்லை. 2 நாளில் இறுதியாகும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார். 

தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் அதிமுக - பாஜக இடையே இழுபறி இல்லை. 2 நாளில் இறுதியாகும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அதிமுகதான் முடிவெடுக்கும். அமமுகவை அதிமுகவுடன் இணைப்பது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் முடிவு செய்வார்கள் என கூறினார். 

தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் அதிமுக - பாஜக இடையே இழுபறி இல்லை. 2 நாளில் இறுதியாகும். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு பாஜகவின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறோம். 

சட்டமன்றத்தில் இரட்டை இலக்கத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் செல்வார்கள் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் பாஜகவின் பங்கு முக்கியமானது. மு.க.ஸ்டாலின் சொல்வது போல பாஜகவில் ரவுடிகள் இல்லை என எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!